ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர்.
Advertisment
ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று போற்றுவார்கள்.
ஆடி அமாவாசையில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை.
எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போல ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
Advertisment
Advertisements
இந்த ஆண்டு ஆடிஅமாவாசை ஆடி 31 ஆம் தேதி (ஆகஸ்ட் 16) அன்று வருகிறது.
காலை 5.51 முதல் 9.08 வரை நீராடி தானம் செய்யலாம்
அமாவாசையன்று அதிகாலை காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 5.51 முதல் 9.08 வரை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.
ஆடி அமாவாசை தினத்தில் பிண்ட தானம், அன்னதானம், பஞ்சபலி கர்மா போன்றவை செய்தால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இந்த பித்ரு தோஷ பரிகாரங்களை ஆடி அமாவாசை அன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிக்குள் செய்ய வேண்டும்.
வீட்டில் முன்னோர் படங்களுக்கு பூக்களிட்டு, பிடித்த உணவுகளைப் படையலிட்டு வணங்கி அதை காக்கைக்கு வைத்து பிறகே சாப்பிட வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது. விளக்கேற்றவோ கோலமிடுவதோ கூடாது.
ஆடி அமாவாசை நன்னாளில், உங்கள் முன்னோர்களை நினைத்து, ஆறு பேருக்காவது அன்னதானம் வழங்குங்கள். இதில் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். அவர்களின் ஆத்மா, உங்களையும் உங்கள் வம்சத்தையும் இனிதே வாழச் செய்யும்.
இதுவரை நீங்கள் பட்ட கஷ்டமும் துக்கமும் காணாமல் போகும். ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“