தை அம்மாவாசை 2024, பித்ரு தோஷம் நீங்கி ஆசிர்வாதம் பெற யார் தர்ப்பணம் தர வேண்டும் என்றும் பெண்கள் தர்ப்பணம் செய்யலமா? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக 6 நாட்கள் உண்டு, தை மாதம் முதல் நாள், சிவராத்திரி ஆடி மாதம் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள் அட்சய திருதியை முன்னிட்டு நம் தர்பண்ம செய்யலாம்.
தை அமாவாசை , பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.35 மணிக்கு தொடங்கி , பிப்ரவரி 10ம் தேதி அதிகாலை 4.34 மணிக்கு முடிவடைகிறது. இது புதிய வாழ்வு ஜெனிக்கும் காலம் என்று முன்னோர்களால் சொல்லப்படுகிறது.
பெண்கள் எப்படி தர்ப்பணம் கொடுக்கலாம் ?
கணவனை இழந்த பெண்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். சுமங்கலி பெண்கள் தங்களின் பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுப்பதானால் எள்ளும், தண்ணீரும் இறைக்கக் கூடாது. இவர்கள் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையலிட்டு, விரதம் இருந்து வழிபடலாம்.
எள் இறைத்து வீட்டில் தர்ப்பணம் செய்யலாமா?
தர்ப்பணம் கொடுப்பதற்கு கருப்பு எள்ளு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வலது உள்ளங்கையில் எள் வைத்து, ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலுக்கு இடையில் எள்ளுடன் கலந்து தண்ணீர் வழிந்து ஓடும் படி தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டில் தர்ப்பண்ம் கொடுப்பவர்கள் மரத்திற்கு அடியில் , தோட்டத்தில் எள்ளும் தண்ணீரும் இறைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“