முன்னோர்களை நாம் வணங்குவதற்கு மிக உன்னதமான நாள் ஆடி அமாவாசை
அமாவாசையில், மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை... ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிறது சாஸ்திரம்.
அதில் ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது.ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று போற்றுவார்கள்.
ஆடி அமாவாசையில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருகிறார்கள். திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போல ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. ஒவ்வொரு அமாவாசையிலும் தர்பணம் செய்யவில்லை என்றாலும் ஆடி அமவாசையின்போது நாம் நிச்சயமாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.
இந்நிலையில் இப்படி தர்பணம் செய்தால், வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும். நாம் ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அது நடக்காது. நாம் இப்படி தர்ப்பணம் செய்தால், எந்த தங்கலும் ஏற்படாது.
இந்த ஆண்டு ஆண்கள் தர்ப்பணம் தரலாம், பெண்கள் படையலிட்டு வணங்கலாம். இந்த ஆண்டு 4.8.2024 வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசை வருகிறது. பெண்கள் வீட்டில் படையலிட்டு தர்ப்பணம் செய்யலாம். காலை 5 மணி முதல் இரவு 8 .45 வரை தர்ப்பணம் செய்யலாம். வீட்டில் வாசலுக்கு வெளியே மற்றும் மொட்டை மாடியில் தர்ப்பணம் செய்யலாம். தாம்புல தட்டு, சொம்பு, உப்பு, கருப்பு எள்ளு, பச்சரிசி, ஆவாரம் பூ, தர்ப்பை ஒன்று, பவித்திரம், வலம்புரிக்காய் சிறிதளவு, இடம்பொறிக்காய் சிறிதளவு வைத்து தர்ப்பணம் செய்யலாம்.
பெண்கள் எப்படி தர்ப்பணம் கொடுக்கலாம் ?
கணவனை இழந்த பெண்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். சுமங்கலி பெண்கள் தங்களின் பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுப்பதானால் எள்ளும், தண்ணீரும் இறைக்கக் கூடாது. இவர்கள் இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையலிட்டு, விரதம் இருந்து வழிபடலாம்.
எள் இறைத்து வீட்டில் தர்ப்பணம் செய்யலாமா?
தர்ப்பணம் கொடுப்பதற்கு கருப்பு எள்ளு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வலது உள்ளங்கையில் எள் வைத்து, ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலுக்கு இடையில் எள்ளுடன் கலந்து தண்ணீர் வழிந்து ஓடும் படி தண்ணீர் ஊற்ற வேண்டும். வீட்டில் தர்ப்பண்ம் கொடுப்பவர்கள் மரத்திற்கு அடியில் , தோட்டத்தில் எள்ளும் தண்ணீரும் இறைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.