/indian-express-tamil/media/media_files/2025/07/24/anitha-amavasai-2025-07-24-07-09-28.jpg)
இந்த ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எப்படி தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து மக்களிசை பாடகி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
ஆடி அமாவாசை என்றைக்கு வருகிறது, எப்போது தர்ப்பணம் கொடுக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை மக்களிசை பாடகி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
இந்து மதத்தில் அமாவாசைகளில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகள் முக்கியமான அமாவாசைகளாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் ஆடி அமாவாசை இன்று (24.07.2025) வியாழக்கிழமை வருகிறது. இந்த ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து மக்களிசை பாடகி அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால், பிரச்னைகள் நீங்கும் என்பது மட்டுமல்ல. இறந்த பித்ருக்களுக்கு மோட்சம் கிடைக்கும். அவர்கள் கடவுளிடம் நமக்கு ஆதரவாக பிரார்த்தனை செய்வார்கள், இதன் மூலம் வம்சம் விருத்தியாகும், பிரச்னைகள் தீரும் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
ஆடி அமாவாசை நாளில் வாத்தியாரை வைத்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். வாத்தியார் இல்லாவிட்டால், பரவாயில்லை. நீங்களே தர்ப்பை புல் மோதிரம் அணிந்துகொண்டு எள்ளும் தண்ணீரும் இரைத்து பித்ரு தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஆடி அமாவாசை நாளில், இறந்த மூதாதையர்களுக்கு என்ன படைக்க வேண்டும் என்றால், உயிருடன் இருந்தபோது அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை படைக்கலாம். முக்கியமாக, அகத்திக் கீரை, வாழைக்காய் கட்டாயம் இடம்பெற வேண்டும், இவற்றை படைக்கலாம் என்று அனிதா குப்புசாமி கூறுகிறார்.
ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களுக்கு சகோதரர்களுடன் அமர்ந்து தர்ப்பணம் கொடுக்கலாம், தானம் கொடுக்கலாம், காக்கைகளுக்கு உணவு வைப்பது, பிற பிராணிகளுக்கு தானம் கொடுக்கலாம்.
ஆடி அமாவாசை நாளில், பித்ரு வழிபாடு முடிகிற வரை கோலம் போடக் கூடாது. பித்ரு வழிபாட்டின்போது மணி அடிக்கக்கூடாது. பித்ரு வழிபாட்டின்போது தனியாக விளக்கு ஏற்றுங்கள். ஆண்கள் விரதம் இருக்க வேண்டும். தந்தையுள்ள மகன்கள் தர்ப்பணம் தனியாக தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. எள் கடன் வாங்கக்கூடாது. எள்ளைக் கடனாகக் கொடுக்கக் கூடாது.
இந்த ஆடி அமாவாசை இன்று வியாழக்கிழமை (24.07.2025) அதிகாலை 2.28 மணிக்கு வெள்ளிக்கிழமை (25.07.-2025) இரவு 12.40 மணிக்கு நிறைவடைகிறது. வியாழக்கிழமை காலை 7.40-க்கு பிறகு, தர்ப்பணம் கொடுக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.