/indian-express-tamil/media/media_files/2025/06/26/aadi-amman-tour-2025-06-26-20-46-12.jpg)
ஆடி ஸ்பெஷல்: வெறும் ரூ.1,000 பட்ஜெட்டில் 9 அம்மன் கோயில்களை ஒரே நாளில் சுற்றி பார்க்கலாம்!
ஆடி மாதத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களின் முக்கிய அம்மன் கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத் துறை செய்துள்ளது. ஒரே நாளில் காலை முதல் இரவுக்குள் 9 அம்மன் கோயில்களை பார்க்கும் பயணத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மன் கோயில்களில் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் களைகட்டும். ஒரே நாளில் 9 அம்மன் கோயில்களைப் பார்த்து ரசிப்பது என்பது ஒரு அருமையான ஆன்மிக அனுபவமாக இருக்கும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) மற்றும் இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) ஆகியவை இணைந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கான சிறப்பு ஒருநாள் ஆன்மிகப் பயணங்களை ஏற்பாடு செய்கின்றன. பரபரப்பான நகர வாழ்க்கைக்கு மத்தியில், ஒரே நாளில் பல அம்மன் கோயில்களைத் தரிசிக்கும் இந்த வாய்ப்பு, பக்தர்களுக்கு மன அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- கற்பகாம்பாள் கோவில், மயிலாப்பூர்
- முண்டகக்கண்ணி அம்மன் கோவில், மயிலாப்பூர்
- கோலவிழி அம்மன் கோவில், மயிலாப்பூர்
- ஆலையம்மன் கோவில், தி.நகர்
- முப்பாத்தம்மன் கோவில், தி.நகர்
- பிடாரி இளங்காளியம்மன் கோவில், சைதாப்பேட்டை
- அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர்
- காமாட்சி அம்மன் கோவில், மங்காடு
- கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு
- பாதாள பொன்னியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்
- காலை 8.30 மணி: சென்னை சுற்றுலா வளாகத்தில் இருந்து உங்கள் ஆன்மிகப் பயணம் தொடங்குகிறது.
- காலை 8.45 மணி: மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற கற்பகாம்பாள் கோவிலில் முதல் தரிசனம்.
- காலை 9.10 மணி: மயிலாப்பூரிலேயே அமைந்துள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில் அடுத்த தரிசனம்.
- காலை 9.40 மணி: மீண்டும் மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் கோவிலில் அன்னை அருள் பெறுதல்.
- காலை 10.10 மணி: தி.நகரில் உள்ள ஆலயம்மன் கோவிலில் அம்மனைத் தரிசிக்கலாம்.
- காலை 10.40 மணி: தி.நகரில் இருக்கும் முப்பாத்தம்மன் கோவிலில் வழிபாடு.
- காலை 11.15 மணி: சைதாப்பேட்டையில் உள்ள பிடாரி இளங்காளியம்மன் கோவிலில் தரிசனம்.
- மதியம் 12.00 மணி: பெசன்ட் நகரில் கடலோரத்தில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோவிலில் எட்டு லட்சுமிகளின் அருளைப் பெறலாம்.
- பிற்பகல் 1.00 முதல் 2.00 மணி வரை: மாங்காடு சென்று, புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து, அங்கு மதிய உணவை அருந்தலாம்.
- மாலை 4.00 மணி: திருவேற்காட்டில் உள்ள சக்தி வாய்ந்த தேவி கருமாரியம்மன் கோவிலில் அன்னை கருமாரியம்மனைத் தரிசித்து அருள் பெறலாம்.
- இரவு 7.15 மணி: கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் இறுதி தரிசனம்.
- இரவு 7.30 மணி: சென்னை சுற்றுலா வளாகத்தில் இந்த ஒருநாள் ஆன்மிகப் பயணம் இனிதே நிறைவடைகிறது.
2025 ஆடி மாத சுற்றுலா தேதிகள்:
- 18/07/2025 08:30
- 20/07/2025 08:30
- 22/07/2025 08:30
- 25/07/2025 08:30
- 27/07/2025 08:30
- 29/07/2025 08:30
- 01/08/2025 08:30
- 03/08/2025 08:30
- 05/08/2025 08:30
- 08/08/2025 08:30
- 10/08/2025 08:30
- 12/08/2025 08:30
- 15/08/2025 08:30
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.