ஆடி அமாவாசை வழிபாடு : ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை ஆடி அமாவாசை ஆகும். இந்த மாதத்தில் வரும் அமாவாசைக்கு பல்வேறு சிறப்புகள் கூறப்படுகின்றன. இதனால் இந்நாளில் பொதுவாக இந்துக்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள்.
இந்த அமாவாசைக்கு ஆன்மிக ரீதியாக சூரியன், சந்திரன் வழிபாடு கூறப்படுகிறது. ஏனெனில் சூரியனை பிதிர் காரகன் என்றும் சந்திரனை மாதுர் காரகன் என்றும் கூறுவார்கள்.
அதாவது சூரிய பகவான் ஆன்ம பலம், வீரம் ஆகியவற்றை வழங்குவார் என்றும் சந்திரன் மனதுக்கு மகிழ்ச்சி தெளிவை தருவார் என்பதும் ஐதீகம்.
இந்தத் தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து சிவாலய வழிபாடு, பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் சிறப்பு பயக்கும்.
மேலும் அமாவாசை தினத்தில் கடல் அல்லது ஆற்றில் நீராடி வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து கங்கை நீர் எடுக்கப்பட்டு, அதன் சுத்திகரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டு செல்லும் பணியை அஞ்சலகம் செய்துவருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் அஞ்சல் அலுவலர் ஒருவர் கூறுகையில், “ஆடி அமாவாசை ஆக.4ஆம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், ஆர்.எஸ் மங்கலம், ராமேஸ்வரம் ஆகிய தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் பாட்டில் ரூ.30க்கு விற்கப்படுகிறது” என்றார்.
மேலும், “இதற்காக சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி கங்கை நீரை வாங்கி பயன்பெறலாம்” என்றார்.
அஞ்சலகங்களில் கங்கை நீர் வெவ்வெறு அளவுகள் கொண்ட பாட்டில்களில் கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“