/indian-express-tamil/media/media_files/YMoOURQ4SSM67LIWjgai.jpg)
ஆடி கிருத்திகை வழிபாட்டைப் பற்றி அனிதா குப்புசாமி வீடியோவில் பகிர்ந்துகொண்ட விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.
முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் இருந்தாலும்,தை மாதத்தில் வரக்கூடிய தை பூசம், ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி கிருத்திகை மற்றும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் உடன் கூடிய கார்த்திகை விரதம் இந்த வழிபாடுகள் முருகனுக்கு உகந்த வழிபாடாகும். இந்த நாட்களில் முருகன் சாமி இருக்கும் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் விசேஷங்கள் நடைபெறும்.
முருகர் கடவுளை நாம் வேண்டிக்கொண்டால், அவர் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இந்த வருடம் ஆடி கிருத்திகைக்கு தனிச் சிறப்பு உள்ளது. இந்த ஆடி கிருத்திகை செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.
குறிப்பாக கிரக தோஷம், நாக தோஷம், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், வேலை இல்லாதவர்கள் முருகனை வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும். நிலப்பிரச்சனை இருந்தால், முருகனை வழிபட்டால் பிரச்சனை நீங்கும்.
அனைத்து வயதினரும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். காலையில் எழுந்து தலைக்கு குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மேடையில் சிவப்பு துணியை வைத்து, அதற்கு மேலாக முருகனின் படத்தை வைக்கவும். வேல் இருந்தாலும் அத்துடன் வைக்கலாம். சிவப்பு நிறம் கொண்ட மலர்களை நெய் வைத்தியம் செய்ய வேண்டும். செவ்வலரி பூவை நாம் நெய் வைத்தியம் செய்ய வேண்டும். அல்லது சிவப்பு ரோஜாக்களை வைத்து நெய் வைத்தியம் செய்யலாம். உப்பு இல்லாமல் சமைக்க வேண்டும்.
உங்களால் முடிந்தால், கொழுக்கட்டை, அதிரசம் செய்யலாம். அவல், பொரி உருண்டை வரை செய்யலாம். விரதம் முடிந்த பின்பு, நாம் அன்னதானம் செய்ய வேண்டும். இதை நாம் முருகப் பெருமானுக்கு படைத்துவிட்டு நாம் விரதம் இருக்க வேண்டும். மதியம் மட்டும் பால், பழங்கள் சாப்பிடலாம்.
முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். அப்படி செய்யும் போது புஷ்பம், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு செய்யலாம். வருகின்ற ஜூலை 30ம் தேதி ஆடி கிருத்திகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை விரதம் வரை விரதம் மேற்கொண்டு பின்பு அதை முடித்துகொள்ளலாம். இல்லையென்றால் 30ம் தேதி அன்று விரதம் மேற்கொள்ளலாம். முதலில் வீட்டில் வழிபாடு செய்து, பிறகு கோவிலுக்கும் செல்லலாம். விரதம் இருக்க முடிவில்லை என்றால், முருகப் பெருமான் மந்திரங்களை நாம் சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.