ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த நாள், திருவிழாக் காலம், குலதெய்வம் வழிபாட்டுக்கு உகந்த மாதம் என்று ஆடி மாதத்தின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக ஆடி மாத அமாவாசையில் குல தெய்வத்தை வீட்டுக்கு அழைத்து வழிபடலாம்.
ஆடி மாத அமாவாசையில் குலதெய்வத்தை வீட்டுக்கு அழைத்து வழிபடும் முறை குறித்து ஓம் ஸ்ரீ தாரா யூடியூப் சேனலில் சொல்லப்பட்டிருக்கிறது. சிறப்பு மிக்க ஆடி மாதத்தில், ஆடி அமாவாசை நாளில், வீட்டில் இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபடலாம். இலுப்பை எண்ணெயை அகல் விளக்கில் ஊற்றி, திரிபோட்டு விளக்கு ஏற்றினால், ஒரு பாசிட்டிவ் சூழல் தோன்றும். இலுப்பை எண்ணெய் கசப்புத் தன்மை உடையது. இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றும்போது, குலதெய்வம் வீட்டுக்கே வரும் என்பது நம்பிக்கை. வேண்டுமானால், ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்ப சேர்த்து விளக்கு ஏற்றலாம்.
அதே போல, குல தெய்வ கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் விளக்கு ஏற்றி வேண்டிக்கொண்டால், நீங்கள் வீட்டுக்கு போவதற்கு முன்பு, குல தெய்வம் உங்கள் வீட்டுக்கு சென்று இருக்கும் என்பது நம்பிக்கை. எந்த பிரச்னையும் இல்லாமல், சந்ததிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வாக்கு கேட்கலாம். அதே போல, முன்னோர்களையும் ஆடி அமாவாசை நாளில் இலுப்பை எண்ணெய் ஏற்றி வழிபடலாம். ஏதாவது தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“