Advertisment

கரை புரளும் காவிரி... ஆடிப்பெருக்கை மக்கள் உற்சாக கொண்டாட்டம்!

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadi Perukku 2024 Cauvery River people celebration Tamil News

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு பண்டிகை, ஆடி மாதத்தின் 18ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம்.

க.சண்முகவடிவேல்

Advertisment

ஆடிப்பெருக்கு அன்றைய தினம் விரதமிருந்து வழிபாடு செய்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பதும், இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலிமாற்றிக்கொள்வர். எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும்  பெருகும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், காவிரி கரை புரளும் பகுதிகளிலும்,டெல்டா மாவட்டங்களிலும், குளக்கரையிலும் ஆடிப் பதினெட்டு வெகு உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்பட காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டு வருகின்றனர். 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் கரையோரங்களிலும் ஆடிப்பெருக்கு பண்டிகை, ஆடி மாதத்தின் 18ம் நாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழா காவிரி தாய்க்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாக பார்க்கப்படுகிறது. அதனால் காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இன்று (ஆகஸ்ட் 3) கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளான இன்று காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். சுமங்கலி பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு தாலிக் கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம் ஆகும். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் காவிரி கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி சேலம்,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படித்துறையில் மக்கள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் வெள்ளம்கட்டுக்கடங்காமல் செல்வதால் ஆற்றுக்கு பதிலாக பைப் மூலம் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி செல்லும் பாதை முழுவதுமே மக்கள் வெள்ள நீரில் இறங்காத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று தாலிக்கயிறு மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இறங்கு பொழுதில் தாலி மாற்றிக் கொள்ளக் கூடாது என்றும் இறங்குபொழுதில் நல்ல நேரம் இருந்தாலும் தாலி கயிறு மாற்றுவதை தவிர்ப்பது நல்லது என்றும் ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபட்டு, காவிரி அன்னையை வழிபட்ட பலனை பெற முடியும். ஆடிப் பெருக்கு வழிபாட்டை வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள்.

இன்று ஆடிப்பெருக்கு மிக விசேஷமான நாள் என்பதால் கிழமை, நட்சத்திரம், திதி என எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இதன் காரணமாக காவிரியை நேரில் வழிபட முடியாத மக்கள், காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்கிறார்கள். இன்று பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஆடிப்பெருக்கு நாளான இன்று கோயில்களுக்கு மக்கள் அதிக அளவில் செல்கிறார்கள். அம்மனை வழிபாடு செய்வதில் அதிக ஆர்வத்துடன் பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சியர் எச்சரிக்கை 

முன்னதாக, ஆடிப்பெருக்கு திருவிழாவை கொண்டாட வரும் மக்கள் காவல்துறை அறிவுரைப்படி ஆற்றில் சில இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும். தடையை மீறி வேற எங்கேயாவது பொதுமக்கள் ஆற்றுக்கரையோரம் இறங்கினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment