நாளை ஆடி 18 பெருக்கு என்பதால் மாங்கல்யம் மாற்றுவதற்கு இது சரியான நாளாக பார்க்கப்படுகிறது. இதை பற்றிய விரிவான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
சுமங்கலி பெண்கள் காவிரி அன்னையை வழிபட்டு தாலிக் கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள்.
தாளிக்கயிறு மாற்றிக்கொள்பவர்கள் 12ம் மணிக்கு முன்பாக மாற்றி கொள்ள வேண்டும். இறங்கும்பொழிதில் தாலி மாற்றிக்கொள்ளக் கூடாது.காலை 7.35 முதல் 8.50 வரை மாற்றிக்கொள்ளலாம். இதுபோல காலை 10.35 முதல் 11.55 வரை மாற்றிக்கொள்ளலாம்.
ஆடிபெருக்கு மிக விசேஷமான நாள் என்பதால் ஆடிப் பெருக்கு வரும் நாளில் கிழமை, நட்சத்திரம், திதி என எதுவும் பார்க்க வேண்டியதில்லை. காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்துக் கட்டிக்கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“