Advertisment

இன்று ஆடிப்பெருக்கு: வழிபாட்டு நடைமுறைகள் என்ன?

ஆடி பதினெட்டாம் பெருக்கு, இந்துக்களின் முதல் தீபாவளி பண்டிகையாக இது முன்னொரு காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadi perukku in tamil aadi perukku 2020

aadi perukku in tamil aadi perukku 2020

aadi perukku in tamil aadi perukku 2020 : தமிழகத்தில், ஆடி மாதம் 18ம் நாள், காவிரி உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆண்டுதோறும் பதினெட்டாம் பெருக்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு, இந்துக்களின் முதல் தீபாவளி பண்டிகையாக இது முன்னொரு காலத்தில் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

 

தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்,கொரோனா தடுப்பு பணி காரணமாக நீர்நிலைகளில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வருடமும் சிறப்பாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா இந்த வருடம் வீட்டில் இருந்து கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

அதே போல், காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடை உத்தரவை மீறி யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் மேலும் சிறப்புப் பெறுகின்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. விவசாயிகள் தங்கள் கழனிகளில் விதைகளைத் தூவி புதிய பயிரிடும் இந்த காலத்திற்கு தனி விசேஷங்கள் உண்டு .

ஆடிப்பெருக்கு தினத்தில் பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விடுவார்கள். புதுமணப் பெண்கள் தங்கள் தாலிக்கயிறு மாற்றி புதுத் தாலிக் கயிறு அணிவார்கள்.தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

aadi perukku date: ஆடிப்பெருக்கு சிறப்புகள்:

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

வீட்டில் இடுந்து எப்படி வழிப்படலாம்:

இந்த வருடம் ஆடிப்பெருக்கு நாளை (2.8.20) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூலை மாதம் போல், இந்த மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் நீர் நிலங்களுக்கு சென்று ஆடிப்பெருக்கு வழிப்படுதல் இயலாத ஒன்று. மேலும் சேலத்தில் ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு வழிப்பாடுக்கு அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வருடம் வீட்டில் இருந்தப்படியே ஆடிபெருக்குக்கு வழிப்படுங்கள். வீட்டில் இருக்கும் பூஜை அறையில் காப்பரிசி செய்து வைத்து கும்மிடுங்கள். மஞ்சள் கயிறை முடித்து வைத்தும் வழிப்படலாம். காப்பரிசி முக்கிய பூஜைகளிலும், பிரதோஷத்தில் நந்திக்கும், பொங்கல் விழாக்களில் படையலிலும், பெண்கள் வளைக்காப்பு விழாவிலும், ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றும் மிக விசேஷமாக நிவேதனமாக வைக்கப்படுகிறது. இதை அன்றைய நாளில் சாப்பிடுபவர்களுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்

aadi perukku special: பலன்கள்!

ஆடிப்பெருக்கன்று வணங்கினால் திருமணம் கைகூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த தினத்தில் விரதம் இருந்து மகா லட்சுமியை வழிபட்டால் திருமணம் கை கூடி வரும்.

ஆடி 18ல் விரதமிருந்து வழிபட்டல் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment