பெண்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் ஆண்களை விட கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஆடை, முகத்தோற்றம், கம்மல், நகைகள், வளையல் என பார்த்து பார்த்து தங்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். சிலர் முகத்திற்கு மெமிக்கல் கிரீம் பயன்படுத்துவார்கள், சிலர் இயற்கையான பொருட்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக பேஸ் பேக் தயாரித்து முகத்திற்கு பயன்படுத்துவார்கள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டில் பேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவார்கள். கோதுமை மாவு உணவு செய்வதற்கு பயன்படுத்தி இருப்போம் ஆனால் பேஸ் பேக்காக பயன்படுத்தி இருப்போமா? அது பற்றி கேள்விபட்டது உண்டா? இல்லை. கோதுமை மாவு சரும பாதுகாப்பிற்கு உகந்தது என்று கூறுகிறார்கள்.
கோதுமையில் நார்ச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், செலினியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. உளுத்தம் பருப்பைப் போல கோதுமையிலும் பேஸ் பேக் போடலாம். எண்ணெய் சரும பிரச்சனைகள், டாக்ஸின்கள், டான், முகப்பரு பிரச்சனைகள் மற்றும் கரும்புள்ளிகள் நீக்குகின்றன. சருமத்தின் தன்மையையும் மேம்படுத்துகிறது.
கோதுமையில் பேஸ் பேக்
கோதுமை மற்றும் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து நன்கு கலக்கவும். பேஸ்ட் தன்மை வந்தவுடன் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, 15-20 நிமிடங்கள் காயவிட்டு, முகத்தை கழுவவும். பின், வித்தியாசத்தை உணர்ந்து பாருங்கள்.
மேலும் இந்த பேக்கில் ரோஸ் வாட்டர் சேர்த்தும் பயன்படுத்தலாம். நீண்ட மணிநேர வேலை, கம்யூட்டர் பயன்பாடு சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ரோஸ் வாட்டர் சருமத்தை கூலாகவும், புத்துணர்ச்சியூட்டுவதாகவும் வைக்க உதவும். கோதுமை மற்றும் பாலுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் காயவிட்டு கழுவலாம்.
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்பு
கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாப்பது அவசியம். இதற்கு, இரண்டு தேக்கரண்டி கோதுமை, தயிர், ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். பேஸ்ட் தன்மை வந்த பிறகு, முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். முகப்பரு உள்ளவர்களுக்கு இந்த பேக் உதவியாக இருக்கும். தினமும் செய்து பார்க்கலாம்.