முதல் டிவி சீரியலில் இருந்து பாதியில் வெளியேற்றம்… விடா முயற்சியால் கிடைத்த பலன் – அசத்தும் அம்ஜத்!

விஜய் டிவியில் தற்போது அதிக ரேட்டிங் பெற்ற சீரியல்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஆயுத எழுத்து சீரியல். மௌனிகா வில்லியாக நடிக்க அம்ஜத், ஸ்ரீத்து ஹீரோ, ஹீரோயினாக நடித்து வந்தனர். ஆனால், இந்த ஜோடி சீரியலில் இருந்து விலக,  சக்திவேல், இந்திரா கதாபாத்திரங்களில் ஆனந்த் மற்றும் சரண்யா சுந்தராஜ் தற்போது…

By: November 26, 2019, 3:51:31 PM

விஜய் டிவியில் தற்போது அதிக ரேட்டிங் பெற்ற சீரியல்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஆயுத எழுத்து சீரியல். மௌனிகா வில்லியாக நடிக்க அம்ஜத், ஸ்ரீத்து ஹீரோ, ஹீரோயினாக நடித்து வந்தனர். ஆனால், இந்த ஜோடி சீரியலில் இருந்து விலக,  சக்திவேல், இந்திரா கதாபாத்திரங்களில் ஆனந்த் மற்றும் சரண்யா சுந்தராஜ் தற்போது நடிக்கிறார்கள்.

அம்ஜத் கான் அவர்கள் தனிப்பட்ட காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்று கூறப்பட்டது. சின்னத்திரையில் அவர் நடித்த முதல் சீரியல் இது தான். ஆனால், அதிலிருந்து அவர் பாதியிலேயே விலகியது குறித்து சின்னத்திரை உலகில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், இதனையெல்லாம் கண்டுகொள்ளாத அம்ஜத் தனது அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். இவர் தற்போது டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘இக்லூ’ என்ற படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி, பரத் மோகன் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். நேர்மையான விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதை இது.

இதற்கு முன்னதாக, புகைப்படம், வல்லினம், மாயா, களம், ரம், நெடுநல்வாடை, கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அம்ஜத் நடித்திருக்கிறார். தற்போது இக்லூ ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தவிர, இரவாகளம் எனும் படம் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார். தனது முதல் டிவி சீரியல் சறுக்கினாலும், தனது வேகத்தை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Aayudha ezhuthu amzath khan movies vijay tv hot star sun tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X