/tamil-ie/media/media_files/uploads/2023/08/Beetroot-Juice.jpg)
ABCG juice benefits
அதிக வைட்டமின்களைப் பெறவும், பளபளப்பான சருமத்துக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆப்பிள், பீட்ரூட், கேரட், இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் ஏபிசிஜி ஜூஸ் நீங்கள் முயற்சித்திருக்கலாம்.
ஆனால் Hairfall__solutions என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வேகமான முடி வளர்ச்சிக்கான மற்றொரு ஏபிசிஜி ஜூஸ் (நெல்லி, பீட்ரூட், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி) ஹேக்கைப் பகிர்ந்துள்ளது.
எப்படி செய்வது?
2 - நெல்லி
2 - பீட்ரூட்
6-8 - கறிவேப்பிலை
கொஞ்சம் இஞ்சி
ஒரு கிளாஸ் தண்ணீர்
இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து ஒன்றாக அரைக்கவும்.
எப்படி உதவும்?
முடி வேகமாக வளர இதை குடிக்கவும். சரும பராமரிப்புக்கும், முடி வளர்ச்சி அதிகரிக்கவும் இதை வாரத்திற்கு மூன்று முறை குடித்து வரவும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Amla.jpg)
நெல்லிக்காய், பீட்ரூட், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று டாக்டர் பிரியங்கா ரோஹத்கி கூறினார். அனைத்து இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்துவது வயதான அறிகுறிகளைக் குறைப்பதில் நன்மையைக் கொண்டுள்ளது.
வைட்டமின்கள் சி, கே, ஏ, பி-காம்ப்ளக்ஸ் மற்றும் ஈ உள்ளடக்கங்களுடன், இந்த மேஜிக் டிரிங்க் உங்கள் சருமத்தை இளமையாகவும், இறுக்கமாகவும் மாற்ற உதவுகிறது, என்று டாக்டர் ரோஹத்கி கூறினார்.
டாக்டர் அர்ச்சனா பத்ரா, உணவியல் நிபுணர் மற்றும் சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளர், ஏபிசிஜி ஹேர் ஹேக் வீட்டிலேயே ஆரோக்கியமான முடியை அடைய மிகவும் வசதியான வழி என்று ஒப்புக்கொண்டார்.
இந்த பானத்தில் இரும்பு, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம் வளமாக உள்ளன.. அவை உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், வலிமையாகவும் மாற்ற உதவுகின்றன, என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.