/tamil-ie/media/media_files/uploads/2018/01/sivakarthikeyan.jpg)
சிவகார்த்திகேயன்
Siva Karthikeyan's HERO: ’இரும்புத்திரை’ படத்தை இயக்கியிருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், தற்போது ‘ஹீரோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இயக்குநர் பிரிய தர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.
’இரும்புத்திரை’ படத்தில் நடித்த, நடிகர் அர்ஜுன் மித்ரனின் ‘ஹீரோ’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இதன் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ‘ஹீரோ’ வெளியாகும் எனத் தெரிகிறது.
Thrilled to have Bollywood stunner @AbhayDeol on board as the antagonist in @Siva_Kartikeyan's #HERO! ???? Excited about this fresh collaboration!@Psmithran@akarjunofficial@thisisysr@kalyanipriyan@george_dop@dhilipaction@ruben_editor@DoneChannel1@gobeatroutepic.twitter.com/cqZizp6zFn
— KJR Studios (@kjr_studios) 19 July 2019
இந்நிலையில், ‘ஹீரோ’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மாஸான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அபாய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் செய்தி தான் அது. பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் உறவினர் இவர்.
இந்த கூட்டணி இணைந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் உற்சாகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.