New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/Reshma-1.jpg)
Abi tailor fame Reshma muralidharan birthday photos went viral on internet
Abi tailor fame Reshma muralidharan birthday photos went viral on internet
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களை விட, ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது சீரியல் நடிகைகளின் நட்பும், அவர்களின் அன்பான அனுசரிப்பும் தான். சைத்ரா ரெட்டி, ரேஷ்மா முரளிதரன், ஷபானா, நக்ஷ்த்திரா இவர்களின் நட்பையும், சேட்டைகளையும் பார்த்து ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது.
அப்படி செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடித்த ஆர்யனும் கடந்த ஆண்டு நவம்பரில், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதாகவும், இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.
இப்படி இருக்க, ஷபானா, ஆர்யனுடன் சேர்ந்து எடுத்த போட்டாவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, விவகாரத்து குறித்து வதந்திக்கு’ முற்றுப்புள்ளியை வைத்தார்.
அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கதாபத்திரத்தில் நடித்தார். அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர்.
ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. சமீபத்தில் ரேஷ்மா’ தன் கணவர் மதனுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரேஷ்மாவுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பிறந்தநாள். இதனை, ரேஷ்மா- மதன், ஷபானா-ஆர்யன் ஒன்றாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களை ஷபானா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து’ என் பிரவுனிக்கு இனிய பிறந்தநாள். உனக்கு முடிவே இல்லாத அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள், நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஐ லவ் யு என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில்’ ரேஷ்மா, ஷபானா இருவரும் ஒரே மாதிரி கருப்பு நிறத்தில் ஃபுளோரல் டிசைன் கொண்ட டாப்ஸை அணிந்துள்ளனர்.
அதேபோல ரேஷ்மா-மதன்; ஷபானா- ஆர்யன் இருக்கும் போட்டோவையும் ஷபானா பகிர்ந்துள்ளார்.
ரேஷ்மாவின் கணவரான மதன். இந்த நாளை மிகவும் நேசிக்கிறேன். இன்று தான் என் காதல் பிறந்தது என கேப்ஷனிட்டு ரேஷ்மாவுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.
இதைப் பார்த்த பலரும் ரெண்டு ஜோடியும் செம கியூட்டா இருக்கீங்க என கமென்டில் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.