Abi Tailor Serial Actress Reshma Muralidaran Beauty secrets Tamil News டயட் பொறுத்தவரைக்கும் இன்ட்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
Abi Tailor Serial Actress Reshma Muralidaran Beauty secrets Tamil News
Abi Tailor Serial Actress Reshma Muralidaran Beauty secrets Tamil News : டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னதிரையில் அறிமுகமானவர் ரேஷ்மா முரளிதரன். பிறகு பூவே பூச்சூடவா தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தத் தொடரில் இவருடன் இணைந்து நடித்த மதன் பாண்டியனை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார். தற்போது அபி டைலர் தொடரில் பிசியாக இருப்பவர், தன்னுடைய பியூட்டி சீக்ரெட்களை பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"சிறிய வயதிலிருந்தே சருமத்திற்கு என்று பெரிதாக எதையும் பயன்படுத்தியது இல்லை. வீட்டில் வழக்கம்போல தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது மட்டுமே என்னுடைய ஸ்கின்கேர் ரொட்டின் என்று சொல்லலாம். மற்றபடி பெரிதாக எதையும் உபயோகப்படுத்த மாட்டேன். தேங்காய் எண்ணெய் உபயோகித்தாலே போதும் நிச்சயம் சருமம் நன்றாக இருக்கும்.
ஆனால், இப்போ ஷூட், ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது என தினசரி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. அதனால், பருக்கள், டேனிங் போன்ற ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு எனக்கான சரும பராமரிப்பு ரொட்டினை இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறேன். அதில், க்ளென்சர், டோனர், சீரம், மாய்ஸ்ச்சரைசர் ஆகியவை அடங்கும். சருமம் டேன் ஆகியது என்றால் முல்தானி மட்டி பேக் போடுவேன். அவ்வளவுதான்.
தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய்தான். ஆனால், நக்ஷ்த்திரா நாகேஷின் அம்மா ஆட்டுப்பால் கலந்த பிரத்தியேகமாக ஒரு எண்ணெய் கொடுத்தார். அத்தைதான் இப்போதைக்கு உபயோகப்படுத்துகிறேன். ரொம்பவே நன்றாக உள்ளது. கூடிய விரைவில் அதனை ஒரு பிராண்டாக வெளியிட பிளான் செய்துகொண்டிருக்கிறோம்.
எனக்கு மற்ற பெண்கள் போல ஹேண்ட்பேக் மாட்டிக்கொள்ளப் பிடிக்காது. ஆனால், கைகளில் எப்போதுமே மொபைல், ஹெட்செட், மாய்ஸ்ச்சரைசர் மற்றும் ஒரு சாக்லேட் இருக்கும். டயட் பொறுத்தவரைக்கும் இன்ட்டர்மிட்டன்ட் மற்றும் கீட்டோ டயட்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil