ஜீ தமிழ் டிவியின்’ டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் ரேஷ்மா சின்னத்திரையில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து’ பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா. அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். ரேஷ்மாவின் அம்மாவும் டெய்லர் என்பதால் அபி டெய்லர் சீரியல் அவர் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.
சமீபத்தில் ரேஷ்மா’ தன் கணவர் மதனுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல, ரேஷ்மாவின் உயிர்த்தோழியும், செம்பருத்தி பார்வதியுமான ஷபானா’ தான் டிராவல் செய்த போது எடுத்த ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்’
அதில்’ ”உங்களால் முடிந்தவரை பயணம் செய்யுங்கள்
வாழ்க்கை என்பது ஒரே இடத்தில் வாழ்வதற்காக அல்ல
உங்கள் வாழ்க்கையை சாகசங்களால் நிரப்புங்கள், பொருட்களால் அல்ல
சொல்ல கதைகள் தான் வேண்டும், காட்ட பொருட்கள் வேண்டாம்
நான் சென்றிராத எல்லா இடங்களையும் நான் மிகவும் காதலிக்கிறேன்” என்று எழுதியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“