வெளியே வெயில் உக்கிரமாக கொதித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் அறைக்கு ஏர் கண்டிஷனிங் அமைக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவின் பல பகுதிகளும் வெப்பத்தால் எரிகின்றன, அதனுடன், நமது பாக்கெட்டுகள் கூட. இரவும் பகலும் ஏசியை ஆன் செய்வதால் மாதக் கடைசியில் மின் கட்டணம் அதிகமாகிறது.
இருப்பினும், ஏ.சி இயங்க கணிசமான ஆற்றல் தேவைப்பட்டாலும், செலவுகளைக் குறைக்க பயனுள்ள உத்திகள் உள்ளன, ஏர் கண்டிஷனர்களுக்கு உகந்த வெப்பநிலையை பராமரிப்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
ஏசி எப்படி வேலை செய்கிறது?
பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, ஏ.சி. பிரசென்ட் டெம்பரேச்சரில் காற்றை வெளியிடுவதில்லை. அதற்கு பதிலாக, இது ஒரு எவபோரேட்டர் காயில் (evaporator coil), உட்புற காற்றை குளிர்விப்பதன் மூலம் செயல்படுகிறது, விரும்பிய வெப்பநிலையை அடைந்த பிறகு அதை மறுசுழற்சி செய்கிறது.
வெளிப்புறக் காற்றைப் பயன்படுத்தும் பாரம்பரிய ஏர் கூலரில் இருந்து இந்த செயல்முறை கணிசமாக வேறுபடுகிறது. திறமையான பயன்பாட்டிற்கு இந்த செயல்பாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம்.
தெர்மோஸ்டாட்
18°C போன்ற குறைந்த டெம்பரேச்சரை செட் செய்வதால், 25°C-க்கு செட் செய்வதை விட அறை வேகமாக குளிர்ச்சியடைகிறது என்று அர்த்தமல்ல. தெர்மோஸ்டாட் அறையின் டெம்பரேச்சரைக் கண்காணித்து அதற்கேற்ப கம்ப்ரசருக்கு அறிவுறுத்துகிறது.
லொயர் செட்டிங், கம்ப்ரசரின் ரன் டைம்-ஐ நீடிக்கிறது, அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. எனவே, 25°C போன்ற ஹையர் செட்டிங், அதிக எனர்ஜி எஃபிஷியன்ட் ஆக இருக்கும்.
கம்ப்ரசர் சைக்கிள் தாக்கம்
அறை, செட் டெம்பரேச்சரை அடையும் போது, கம்ப்ரசர் நிறுத்தப்படும், மற்றும் ஃபேன் மட்டுமே இயங்கி மின்சார பயன்பாட்டைக் குறைக்கிறது. சில ஏசி யூனிட்கள் அதிக ஆற்றலைச் சேமிப்பதற்காக ஃபேன் –ஐ நிறுத்துகின்றன, யூசர்ஸ் அதற்குப் பதிலாக சீலிங் ஃபேன் பயன்படுத்த அனுமதிக்கிறது.
தெர்மோஸ்டாட் செட்டிங்கை 1°C ஆல் அதிகரிப்பதன் மூலம், எனர்ஜி பில்களில் 3-5% சேமிக்க முடியும், இது கணிசமான குறைப்பு என்று ACEEE ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஐடியல் தெர்மோஸ்டாட் செட்டிங்
கோடை காலத்தில் 23.5°C மற்றும் 25.5°C இடையே உகந்த வசதியான டெம்பரேச்சர் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 24°C செட்டிங், கம்ஃபர்ட் மற்றும் ஆற்றல் திறனை சமன் செய்கிறது. ஏசிகளுடன் இணைந்து சீலிங் ஃபேன் பயன்படுத்துவது ஆற்றலைச் சேமிக்கும் போது வசதியை மேலும் அதிகரிக்கிறது.
"Quick Cool" அம்சமானது டெம்பரேச்சரை 18°C வரை அமைக்கிறது, இந்த நிலையை அடைய அதிகப்படியான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. 24°C போன்ற மிதமான செட்டிங் குறைந்த மின்சார உபயோகத்துடன், வசதியை அடைய முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“