இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் சாம்பியனான பிவி சிந்து ஒரு சிறந்த ஃபேஷன் கலைஞராகவும் இருக்கிறார். பல்வேறு ஆடை வடிவமைப்பு நிபுணர்கள் வடிவமைத்த உடைகளை அணிந்து எடுத்த புகைப்படங்களை சிந்து, அடிக்கடி தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
அப்படித்தான் சிந்துவின், சமீபத்திய இன்ஸ்டா புகைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதில், அவரது சார்டோரியல் (sartorial) பாணியிலான ஆடை நம்மை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
சமீபத்தில் ஏசிங் கம்ஃபர்ட் ஃபேஷனைப் பார்த்த சிந்து, ”இந்திய ஃபேஷன் லேபிள்” சுனந்தினியின், வெள்ளை நிற காட்டன் ஜம்ப்சூட்டை’ பிங்க் மற்றும் மஞ்சள் நிறத்துடன் அணிந்திருந்தார். எளிமையான, குறைவான மற்றும் நம்பமுடியாத ஸ்டைலான’ வெள்ளை நிற ஸ்னீக்கர்களுடன் சிந்து இந்த ஆடையை இணைத்தார்.
இந்த ஜம்ப்சூட் புதுப்பாணியானதாகவும், இடுப்பில் கொஞ்சம் டை-அப் விவரத்துடன், முழு ஆடையையும் ஒன்றாக இணைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இடுப்பிலிருந்து விரிவடைவதால், இந்த ஆடை எந்த உடல் வகையிலும் அழகாக பொருந்திபோகும்.
அத்துடன் சிந்துவின் ஃப்ளாலெஸ் மேக்கப், அவரது ஆரோக்கியமான சருமம் ஆகியவை கூட கவனத்தை ஈர்த்தது. இங்கே பாருங்கள்:
பேட்மிண்டன் வீராங்கனை நிச்சயமாக தன்னைப் பின்தொடர்பவர்கள், தனது அடுத்த சுவாரஸ்யமான உடையைப் பற்றி யூகிக்க விரும்புகிறார்.
அதை நம்பமுடியாத அளவிற்கு கம்பீரமாக வைத்துக்கொண்டு சிந்து, சுனந்தினியிடம் இருந்து ஒரு க்ரீன் கோ-ஆர்டர் செட்டைத் தேர்ந்தெடுத்தார். அந்த கிராப் டாப்’பில் பொஃபண்ட் ஸ்லீவ்ஸ், பட்டன்கள் மற்றும் காலர் விவரங்கள் இடம்பெற்றன. இங்கே பாருங்கள்:
அதில் மேட்சிங் பேன்ட்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சிந்து தனது நேர்த்தியான ஆடையை ஒரு ஜோடி டிரான்ஸ்பரன்ஸ் ஹீல்ஸுடன் இணைத்து, போஸ் கொடுக்கும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறந்த பாதங்களை முன்னோக்கி வைத்து, மைதானத்திற்கு வெளியேயும் பிரகாசிக்க முடியும் என்பதை சிந்து நிரூபித்தார்!
சிந்துவின் புதிய பேஷனை நீங்கள் விரும்புகிறீர்களா? எங்களுக்கு தெரிவியுங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”