என்ன! முகப்பருவ கிள்ளுனா உயிருக்கு ஆபத்தா? எச்சரிக்கும் தோல் நோய் நிபுணர்

தோல் நோய் நிபுணர் டாக்டர் ஷீனா கபூர், முகப்பருக்களைக் கிள்ளுவது ஏன் தீங்கு விளைவிக்கும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சேதத்தைக் குறைப்பது அல்லது முற்றிலுமாகத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார்.

தோல் நோய் நிபுணர் டாக்டர் ஷீனா கபூர், முகப்பருக்களைக் கிள்ளுவது ஏன் தீங்கு விளைவிக்கும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சேதத்தைக் குறைப்பது அல்லது முற்றிலுமாகத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார்.

author-image
WebDesk
New Update
pimples

How to prevent acne scarring

முகப்பருக்கள் மிகவும் தொந்தரவு அளிக்கக்கூடியவை, மேலும் பருவை கிள்ளும் ஆசை பலருக்கு தவிர்க்க முடியாததாகத் தோன்றும். இது விரைவான தீர்வாகத் தோன்றினாலும், பருக்களை கிள்ளுவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும், குறிப்பாக முகத்தின் சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட வகை முகப்பருக்களுக்கு.

Advertisment

இந்தூரில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையின் தோல் நோய் நிபுணர் டாக்டர் ஷீனா கபூர், முகப்பருக்களைக் கிள்ளுவது ஏன் தீங்கு விளைவிக்கும், அதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சேதத்தைக் குறைப்பது அல்லது முற்றிலுமாகத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விளக்குகிறார்.

சில பகுதிகளில் முகப்பருக்களைக் கிள்ளுவது ஏன் மோசமானது?

எல்லா முகப்பருக்களும் ஒரே மாதிரியானவை அல்ல, சில இடங்களைக் கிள்ளும்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. "வாயின் மூலைகளிலிருந்து மூக்கின் பாலம் வரை நீண்டுள்ள முகத்தின் 'அபாயகரமான முக்கோணம்' பகுதியில் உள்ள முகப்பருக்கள் குறிப்பாக ஆபத்தானவை," என்று டாக்டர் கபூர் கூறுகிறார். 

Advertisment
Advertisements

இந்த பகுதியில் மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் உள்ள முகப்பருக்களைக் கிள்ளுவதால் ஏற்படும் எந்தவொரு தொற்றுநோயும், அரிதான சமயங்களில், காவர்னஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

காவர்னஸ் சைனஸ் த்ரோம்போசிஸ் (CST) என்பது ஒரு அரிய ஆனால் தீவிரமான மருத்துவ நிலையாகும், இதில் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நரம்பான காவர்னஸ் சைனஸில் இரத்த உறைவு உருவாகிறது. இந்த நரம்பு முகம் மற்றும் மூளையிலிருந்து இரத்தத்தை வடிகட்டுவதற்குப் பொறுப்பாகும். இந்த நரம்பு ஒரு உறைவால் தடுக்கப்படும்போது, ​​இரத்த ஓட்டம் குறைபாடு மற்றும் தொற்று, மூளை மற்றும் சுற்றியுள்ள திசுக்களுக்கு பரவும் அபாயம் காரணமாக கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம்.

கூடுதலாக, நீர்க்கட்டிகள் அல்லது முடிச்சுகள் போன்ற ஆழமான பருக்களைப் பிழியும்போது வடுக்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இதுபோன்ற முகப்பருக்களை வீட்டில் நீங்களே அகற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று டாக்டர் கபூர் அறிவுறுத்துகிறார், ஏனெனில் முறையற்ற கையாளுதல் பாக்டீரியாவை சருமத்தின் ஆழத்திற்குள் தள்ளி வீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.

முகப்பருக்களைக் கிள்ளுவதற்குப் பதிலாக நீங்கள் என்ன செய்ய வேண்டும்?     

முகப்பருக்களைத் தொடுவது அல்லது கிள்ளுவதை தவிர்க்கவும்.

உங்கள் சரும வகைக்கு ஏற்ற வழிகாட்டுதல் மற்றும் மருந்துகளுக்காக ஒரு நிபுணரை அணுகவும்.

மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் சாலிசிலிக் அமிலம் அல்லது பென்சாயில் பெராக்சைடு போன்ற முகப்பருவை எதிர்த்துப் போராடும் பிராடக்ட்ஸ் பயன்படுத்தவும்.

கரும்புள்ளிகள் அல்லது வெள்ளைப்புள்ளிகளுக்கு, அபாயங்களைக் குறைப்பதற்காக மருத்துவ அமைப்பில் நிபுணத்துவப் பிரித்தெடுத்தலைத் தேர்வு செய்யவும்.

முகப்பருக்களைக் கிள்ளுவது தெளிவான சருமத்திற்கு ஒரு குறுக்குவழியாகத் தோன்றினாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகள் தற்காலிக நன்மைகளை விட மிக அதிகம். முகப்பருக்கள் உள்ளவர்கள் கிள்ளும் ஆசையை எதிர்த்துப் போராடி நிபுணத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று டாக்டர் கபூர் அறிவுறுத்துகிறார்.

நவீன தோல் மருத்துவ முன்னேற்றங்களால், முகப்பருக்களைக் கிள்ளுவதால் ஏற்படும் சேதத்தை பெரும்பாலும் குறைக்க முடியும், ஆனால் தடுப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.

Read in English: You must never pop pimples on the ‘danger triangle’ of your face

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: