நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் துணை ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் 2019இல் நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75ஆம் இடம் பிடித்திருந்தார்.
தொடர்ந்து, அவருக்கு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலர் பணி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் தமிழ்நாடு திரும்பினர். அதில் நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதனும் ஒருவர் ஆவார்.
இதையடுத்து ஸ்ருதன் இன்று (அக்.19) திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து பேசிய ஸ்ருதன், “சிறு வயது முதலே கல்வியில் மிளிர வேண்டும் என எனது பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆலோசனையில் இணைந்து பணிந்து, திருப்பூர் மக்கள், தொழிற்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன்” என்றார்.
நடிகர் சின்னி ஜெயந்தின் மகனுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் உள்பட பொதுமக்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil