ஒரு மா செடி ரூ5000, அந்த பழம் ஒரு கிலோ ரூ1 லட்சம்; ஜப்பானிய மாம்பழம் விளைவிக்கும் தமிழ் நடிகர்!

மாம்பலத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியும், அனால் ஒரு கிலோ ஒரு லட்சத்திற்கு விற்பனையாகும் மாம்பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மாம்பலத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியும், அனால் ஒரு கிலோ ஒரு லட்சத்திற்கு விற்பனையாகும் மாம்பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-09 182043

இனிப்புச் சுவை நிறைந்த கோடைக்கால பழமான மாம்பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. அதனால்தான் என்னவோ இதை பழங்களின் ராஜா என அழைக்கிறார்கள். குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுவது வரை என நம் உடல்நலத்திற்கு பல நன்மைகளை தரும் மாம்பழத்தை அவசியம் நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Advertisment

மாம்பழத்தில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. ஒரு கப் மாம்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின் சி அளவில் 67 சதவிகிதம் அடங்கியுள்ளது. எனினும் நன்றாக பழுத்த மாம்பழத்தை விட மாங்காயில் தான் வைட்டமின் சி அதிகமுள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

மாம்பலத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியும், அனால் ஒரு கிலோ ஒரு லட்சத்திற்கு விற்பனையாகும் மாம்பழத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி பேசியுள்ளார் நடிகர் இயக்குனர் அருண்பாண்டியன். அதை பற்றி பார்க்கலாம். 

சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அருண்பாண்டியன்.தொடர்ந்து, ஊமை விழிகள், இணைந்த கைகள், ஊழியன், தாயகம், உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்திருந்த அருண்பாண்டியன், வீரநடை, ரிஷி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும், அஜித் நடித்த திருப்பதி உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல், 2002-ம் ஆண்டு வெளியான தேவன் படத்தின் மூலம் இயக்குனராகவும் முத்திரை பதித்த அருண்பாண்டியன், அடுத்து விகடன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். 

Advertisment
Advertisements

2010-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் விருதகிரி என்ற படத்தில் நடித்திருந்த அருண்பாண்டியன் அதன்பிறகு 2 படங்களில் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார், 2021-ம் ஆண்டு வெளியான அன்பிற்கினியாள் என்ற படத்தை தயாரித்து தனது மகளுடன் இணைந்து நடித்திருந்தார். தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமை கொண்ட அருண்பாண்டியன் அடிப்படையில் ஒரு ஆர்கானிக் விவசாயி ஆவார்.

சென்னையில் தனது தொழில்களை கவனித்து வந்தாலும், மாதத்தில் 10 நாட்கள், ஊருக்கு சென்று தனது சொந்த கிராமத்தில், தனது தந்தையுடன் இருக்கும் அருண்பாண்டியன், தொழில் இருப்பதால் சென்னையில் இருக்கிறேன். இல்லை என்றால், நான் கிராமத்திலேயே தங்கிவிடுவென் என்று கூறியுள்ளார். அதேபோல் மிகாஸகி என்ற ஜப்பான் நாட்டு மாம்பழம் தனது தோட்டத்தில் இருப்பதாகவும், அந்த மாம்பழத்தின் ஒரு கிலோ விலை ரூ 1 லட்சம் என்றும், சமீபத்தில் தான் அதை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: