தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர், எம்எல்ஏ, எம்.பி.யாக இருந்தவர் நடிகர் நெப்போலியன். மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அங்கு விவசாயம் செய்வதோடு, பண்ணை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்.
Advertisment
இந்த பண்ணைக்கு`நெப்போலியன் பண்ணை’ என பெயர் வைத்திருக்கிறார்.
யூடியூபர் இர்பான் கடந்த ஆண்டு நெப்போலியன் வீட்டின் `ஹோம் டூர்’ வீடியோவை தனது இர்ஃபான் வியூஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இப்போது அமெரிக்கா நாஷ்வில்லியில் உள்ள நெப்போலியனின் 300 ஏக்கர்`ஃபார்ம் டூர்’ வீடியோவை பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
‘இந்த பண்ணையை வாங்கி மூன்று வருஷம் மேல ஆகுது. 300 ஏக்கர் தோட்டம் இது. சில வருஷங்களுக்கு முன்னாடி குதிரை பண்ணை வாங்கினேன். குதிரையைப் பார்க்கிறதுக்காக இந்த இடத்தை அடிக்கடி கிராஸ் பண்ணி போவேன்..
அப்படி போகும் போது இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருந்தது, உரிமையாளர்கிட்ட பேசும்போது இங்குள்ள பார்ம் ஹவுஸ் 1963-ல் கட்டுனதுனு சொன்னாரு. ஆச்சர்யம் என்னென்னா நான் பிறந்த வருஷத்தில இந்த வீட்டை கட்டியிருக்கிறாங்க. அதைக் கேட்டதும் இந்த இடத்தை வாங்கிட்டேன்’ என்று பல சுவாரஸ்ய விஷயங்களை அந்த வீடியோவில் நெப்போலியன் பகிர்ந்து கொண்டார்.
இந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.