ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கை, ஜப்பானில் கல்யாணம்: களைகட்டும் நெப்போலியன் மகன் திருமணம்

உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தோடு இந்தியா வந்து நிச்சயத்தை முடித்திருக்கிறார்.

உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தோடு இந்தியா வந்து நிச்சயத்தை முடித்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Napolean Dhanush

Napolean son Dhanush Wedding Invitation viral

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர், எம்எல்ஏ, எம்.பி. என இருந்தவர் நடிகர் நெப்போலியன். மகனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.

Advertisment

அங்கு சொகுசு பங்களா ஒன்றைக் கட்டியவர், ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். 

நெப்போலியன் சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமாவை விட்டு ஒதுங்க என்ன காரணம் என்பது குறித்து மனம் திறந்து பேசினார்.

 ஒருமுறை எனது மகன் தனுஷ் என்னிடம், ’அப்பா இனிமேலும் நான் இப்படி தனியா தான் இருக்கணுமா... நீ இல்லாமல் இருக்கணுமா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இதன் பிறகுதான் இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன்என நெப்போலியன் அந்த வீடியோவில் பேசினார்.

Advertisment
Advertisements

நெப்போலியன் மகன் தனுஷ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு இப்போது திருநெல்வேயில் இருக்கும் அக்ஷயா என்ற பெண்ணுடன் வீடியோ காலில் நிச்சயம் நடந்தது.

அந்த வீடியோவை தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்...

உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தோடு இந்தியா வந்து நிச்சயத்தை முடித்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய இருக்கிறார்.

தனுஷ் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

இப்போது தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண பத்திரிக்கை வீடியோவும் வெளியாகி இருக்கிறது. பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சடிக்கப்பட்ட இந்த பத்திரிக்கை பலரையும் கவர்ந்துள்ளது.

தனுஷ் திருமணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் வைத்து நடைபெறுவதாக கூறப்பட்டிருக்கிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“  

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: