/tamil-ie/media/media_files/uploads/2019/12/a38-2.jpg)
actor sanjeev about his friendship about actor vijay srinath - லயோலா கல்லூரியில் Aptitude Test அட்ராசிட்டி.... விஜய்யுடன் நண்பர்கள் ஆனது எப்படி? - சஞ்சீவ்
எவ்வளவு தான் ஷூட்டிங் இருந்தாலும், எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், விஜய் தவறாமல் செய்யும் ஒரு செயல் நண்பர்களை சந்திப்பது. விஜய்யின் கேங் பற்றி பரவலாக அனைவருக்கும் தெரியும். அதில், சஞ்சீவ் சீரியலில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமானவர். ஆனால், ஸ்ரீநாத்தும் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது பலருக்கும் தெரியாது.
குறிப்பாக, விஜய் நண்பர்களை சந்திப்பது என்று முடிவெடுத்துவிட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி ஸ்ரீநாத் வருகிறாரா? என்பது தானாம். ஏனெனில், தனது காமெடி பேச்சால் அந்த கேங்கை கலகலப்பாக வைத்திருப்பதே ஸ்ரீநாத் தான்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ், விஜய்யுடன் நாங்கள் நண்பர்கள் ஆனது எப்படி? என்று கூறியுள்ளார். விஜய் படித்தது சென்னை லயோலா கல்லூரி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கல்லூரியில் நடந்த ஒரு நுழைவு தேர்வில் விஜய், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விஸ்காம் சேர வேண்டும் என்றால், முதலில் Aptitude Test பாஸ் பண்ண வேண்டும். அந்த தேர்வின் போது, விஜய்யும், ஸ்ரீநாத்தும் அருகருகில் அமர்ந்து இருந்தனர். அப்போது, சில கேள்விகளுக்கான பதிலை மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டு எழுதி இருக்கின்றனர். அப்போது, 'ஓ... இந்த கேள்வியா? என்று ஆர்வமாக கேட்டு, சத்தியமா தெரியாது-ங்க' என்று ஸ்ரீநாத் சொல்ல, விஜய் சிரித்தேவிட்டாராம்.
பின்னர் "தேர்வு முடிந்து வெளியே வந்ததும் மூன்று பேறும் பேசி நண்பர்களாக மாறினோம். அதில் இருந்து 25 வருடங்களாக எங்கள் நட்பு அப்போது தொடர்கிறது" என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.