மாப்பிள்ளை கெட்டப்பில் ஜம்முன்னு சதீஷ்.. வெட்கத்தில் சிந்து! கல்யாண வீடியோ வந்தாச்சி

சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனறு நம்ப வைக்க அவர் அவ்வளவு பாடுப்பட்டார்.

actor sathish wife sathish marraige
actor sathish wife sathish marraige

actor sathish wife sathish marraige : நடிகர் சதீஷ் – சிந்து திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. பார்ப்பதற்கே மிகவும் அழகாவும், உணர்வுபூர்வமாக இருக்கும் திருமண வீடியோவை நீங்களும் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகனுக்கான திரைக்கதை எழுத்தாளராக 8 வருடங்களாக பணியாற்றியவர் காமெடி நடிகர் சதீஷ். அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் வந்த காமெடி படமான, பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசன கர்த்தாவாக பணியாற்றினார். 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.

அதன் பிறகு விஜய்யின் ’கத்தி, பைரவா’ போன்ற முக்கியப் படங்களில் நடித்தார். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் சதிஷ், சிவாவின் நெருங்கிய நண்பரும் கூட. இந்நிலையில் சதீஷ்க்கு திடீரென்று சிந்து என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. சதீஷ், சிந்துவுடன் மோதிரம் மாற்றிய புகைப்படம் மட்டுமே முதலில் வெளியாகியது. பின்பு தனக்கு நிச்சயமான தகவலை சதீஷ் உறுதி செய்தார்.

ஆரம்பத்தில் சதீஷை , நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் வைத்து பல வதந்திகள் வெளியாகின. இதற்கு கீர்த்தி சுரேஷின் அம்மா கூட பிரபல தொலைக்காட்சியில் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் சதீஷ், சிந்து என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இதுவும் காதல் திருமணம் என தகவல்கள் வெளியாகின. காரணம், சிந்துவின் அண்ணன் சாச்சி, சிக்சர் படத்தின் இயக்குனர் ஆவார். சிக்சர் படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படி தான் சிந்துவை சதீஷ் மீட் செய்திருப்பார் என்று நம்பப்பட்டது. ஆனால், மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சதீஷ்- சிந்து திருமணம் கடந்த டிசம்பர் மாதம் நடைப்பெற்றது. இதில் சினிமா கலைஞர்கள் பலரும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண கேண்டிட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மகளா? மருமகனா? வனிதா பிரச்சனையில் மொத்த குடும்பமும் ஆகாஷ் பக்கம் தான்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor sathish wife sathish marraige sathish sindhu wedding video actor sathish marriage video

Next Story
ஆண்டுக்கு ரூ6000 மத்திய அரசு உதவித் திட்டம்: அடுத்த தவணை எப்போது என பார்த்தீர்களா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express