மகளா? மருமகனா? வனிதா பிரச்சனையில் மொத்த குடும்பமும் ஆகாஷ் பக்கம் தான்!

இந்த காரணத்தினால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது

By: Updated: July 14, 2020, 04:21:32 PM

vanitha vijayakumar first marriage vanitha : வனிதா விஜயகுமார். அடிக்கடி அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயர். காரணம் வனிதா அண்மையில்செய்துக்கொண்ட மூன்றாவது திருமணம் தான். எந்த பக்கம் திரும்பினாலும் வனிதா பற்றிய பேச்சு தான்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பேரின் வாழ்க்கை மாறியது. அதில் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.மிகப் பெரிய சினிமா பின்னணி கொண்டவர் என்றாலும் வனிதா மீத ஏகப்பட்ட விமர்சனங்கள் இருக்கிறது.குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் வனிதாவின் பெயர் டேமேஜ் ஆகியது. ஆனால் அந்த அனைத்தையும் பிக் பாஸ் 100 நாட்களில் மாற்றியது.

வனிதாவால் தான் பிக் பாஸ் டி.ஆர்.பி எகிறியது. இதனை பயன்படுத்திக் கொண்ட வனிதா, யூடியூபில் சமையல் நிகழ்ச்சியை தொடங்கினார்.வனிதாவை, விஜயக்குமார் குடும்பத்தினர் யாரும் கண்டுக்கொள்ளவது இல்லை. இந்த நேரத்தில் தான் பீட்டர் பால் உடன் வனிதாவின் திருமணம் அரங்கேறியது. அதுவும் இப்போது சர்ச்சையில் முடிந்துள்ளது.

இந்த நேரத்தில் வனிதாவின் முதல் கணவர் குறித்த தேடல்கள் வலைத்தளங்களில் அதிகம் ஆகின.கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆகாஷ், சமுத்திரம், தாமிரபரணி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் அழகான தோற்றம் கொண்டவர். ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் விஜய் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அப்போது மூத்த மகன் ஸ்ரீஹரி விஜய்-யை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று ஆகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வனிதாவின் குடும்பமும் ஆகாஷ் பக்கம் நின்றனர்.இந்த காரணத்தினால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது.விஜயகுமார் உடன் சென்ற ஸ்ரீஹரியை, சென்னை விமான நிலையத்தில் வனிதா வலுக்கட்டாயமாக இழுக்க முயன்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லை ஆகாஷூம் ஸ்ரீஹரியை விடவில்லை. இந்நிலையில் தான் மகள் தாயுடனும், மகன் அப்பாவுடனும் வளர நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடிக்கடி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சென்று வருவார்… யாரும் அறிந்திடாத விஜய் டிவி ராமரின் மறுபக்கம்!

ஸ்ரீஹரியும் தந்தையுடனே செல்ல விருப்பம் தெரிவித்திருந்தான். அதன் பின்பு ஆகாஷ் திருமணம் செய்துக் கொள்ளாமல் தன் மகனுக்காகவே தனியாக வாழ்ந்தார். வாழ்ந்து வருகிறார். தற்போது 23 வய்தாகும் ஸ்ரீஹரி தனது தாத்தா குடும்பத்துடன் மட்டும் தொடர்பில் இருக்கிறார். குடும்ப நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்துக் கொள்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vanitha vijayakumar first marriage vanitha vijayakumar first husband vanitha vijayakumar son srihari vanitha peter marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X