Actor Thambi Ramaiah Son Umapathy Ramaiah about Survivor show Tamil News : பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மற்றுமொரு ரியாலிட்டி ஷோ மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால் அது ஜீ தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சிதான். 90 நாட்கள் காடு, மலைகளில் பல சவால்களை எதிர்கொண்டு எந்த அளவிற்குத் துணிச்சலோடு வாழ்கிறார்கள் என்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, விஜயலக்ஷ்மி, விஜே பார்வதி, நடிகர் விக்ராந்த், நந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்குபெறுகின்றனர். அந்த வரிசையில் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவும் பங்குபெறுகிறார். அவர், இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக எந்த அளவிற்குத் தன்னை தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
"சர்வைவர் ஒரு பெஸ்ட் ரியாலிட்டி நிகழ்ச்சி. இதில் நான் பங்குபெற இருக்கிறேன் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் எதிர்பார்ப்பையும் தருகிறது. பிரபலத்தின் மகன் என்பதால் இந்த வாய்ப்பு எனக்கு எளிதில் கிடைத்துவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், உண்மை அது அல்ல. ஏராளமானவர்களில் இருந்து, நிறைய நேர்காணல் வைத்து, கதறவைத்துத்தான் ஒவ்வொரு போட்டியாளரையும் தேர்வு செய்திருக்கின்றனர். இது நிச்சயம் மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிபோல இருக்காது. நாங்கள் போகின்ற இடத்தில் கழிவறை கிடையாது, 90 நாட்களுக்கு இரண்டு உடைகள் மட்டுமே தருவார்கள். இப்படி பல்வேறு விதமான தடங்கல்களிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறேன் என்பதைப் பார்க்க எனக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
என்றுடைய சிறு வயதிலிருந்தே அப்பா எந்தவிதமான கஷ்டத்தையும் கொடுத்ததில்லை. முழு நேரமும் உழைத்துக்கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு விஷயம் தவறாக இருக்கிறதே என்கிற எண்ணம் தோன்றும். அப்போது அவ்வளவு பெரிய வெற்றியை அப்பா அடையவில்லை. ஆனால், நான் 12-ம் வகுப்பு படித்து முடித்தபிறகுதான் அப்பாவின் முழுமையான வலியும் கஷ்டமும் எனக்குப் புரிந்தது.
என்னை நேபோட்டிசம் ப்ராடக்ட் பலர் கூறுவதுண்டு. சொல்கிறவர்கள் சொல்லட்டும். ஆனால், என்னுடைய முயற்சியில் நான் என்ன பெஸ்ட் கொடுக்கிறேன் என்பதுதான் முக்கியம். இவன் ஓர்த்துடா என்று மற்றவர்கள் சொல்லும் நாள் வரும் என்கிற நம்பிக்கை உண்டு. அப்பாவின் பேரைக் காப்பாற்றவில்லை என்றாலும்கூட கெடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அந்த டென்ஷன்தான் அதிகம் இருக்கு. 'நான் ஒரு விசிட்டிங் கார்ட்தான், க்ரெடிட் கார்ட் இல்லை' என்று அடிக்கடி அப்பா கூறுவார். என்னை நான் நிரூபிக்கவே பல விஷயங்களை செய்துகொண்டிருக்கிறேன். இருக்கப்போவது 1 நாளோ 90 நாளோ ஆனால், இருக்கும் நாள்கள் வரை ஒழுங்கா இருக்கனும். குறைந்தபட்சம் 2 பேருக்காவது இன்ஸ்பிரேஷனாக இருக்கனும்.
எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதனால், அதனை முறைப்படி கற்றுக்கொண்டேன். ஆனால், அப்பாவிற்கு அதில் உடன்பாடில்லை. பிறகு மிக்சிடு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டேன். அதிலும், முகம் அடிபட்டுவிடும் என்று எண்ணிய அப்பா அங்குச் செல்ல தடை போட்டார். இறுதியாக சினிமா துறையில் காலடி பாதிக்கவுள்ளேன். நிச்சயம் எனக்கான அடையாளத்தை உருவாக்குவேன் என்கிற நம்பிக்கை உண்டு. இந்த நிகழ்ச்சிக்கும் எந்தவித பிரிபரேஷனும் இல்லாமல் ஃப்ளோவில் போகிறேன்" என்கிறார் நம்பிக்கையோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.