நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டில் தற்போது சினிமா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தனது மகன் சஞ்சய்க்கு நடிப்பை தாண்டி படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருப்பதாக விஜய் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Advertisment
சமீபத்தில் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் சமீபத்தில் யூடியூபில் வெளியானது.
Advertisment
Advertisements
இயக்கம் குறித்த முழுமையான பயிற்சிக்கு பிறகு அவர் இயக்குநராக களமிறங்குவார் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆன சித்ரா லட்சுமணன் தனது டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஒரு வீடியோவில் ஜேசன் சஞ்சய் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
’சஞ்சய் ஒரு கதாநாயகனுக்குரிய தோற்றத்தில் இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேநேரத்துல திரைப்படங்களை இயக்க வேண்டும் என்கிற ஆர்வமும் அவருக்கு இருக்கு. அவரே இயக்கி கூட திரைப்படத்தில் நடிப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது’ என்று சித்ரா லட்சுமணன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“