தளபதியின் சித்தப்பா மகன்! நடிகர் விக்ராந்தின் க்யூட் குடும்ப கேலரி.

சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார்

actor vikranth family photos

actor vikranth family photos : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க இன்று வரை போராடி வருபவர் விக்ராந்த். இதுவரை தனது நடிப்பில் விக்ராந்த் எந்த குறையும் வைத்ததில்லை. இருந்த போது அவரின் ஒருசில படங்கள் போதிய எதிர்பார்ப்பை பெறவில்லை என்ற வருத்தம் அவருக்கு எப்போதுமே இருக்கும். நடிகர் விஜய்யின் சித்தப்பா மகனான நடிகர் விக்ராந்த் கற்க கசடற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அவரின் முதல் படத்தில் அவரை பார்த்த எல்லாருமே விஜய் மாறி இருக்காரு, விஜய் சிரிப்பு போலவே இருக்கிறது என கூறினார். விக்ராந்தின் பலமும் அதுதான். பலவீனமும் அதுதான். இருந்த போதும் தனது அண்ணனின் எந்த ஒரு பெயரையும் பயன்படுத்திக் கொள்ளாத விக்ராந்த சினிமாவில் தனக்கென தனி பாதை, தனி நண்பர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.

விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ராந்த் மனைவி மானசா மலையாள நடிகை கணக்காதுர்காவின் மகளாவார். இவர்களுக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மானசா சன் டிவியில் ஒளிப்பரப்பான உதிரிப்பூக்கள் சீரியலிலும் நடித்துள்ளார். இவர்களது காதல் திருமணம் ஆகும். திருமணத்திற்கு பிறகு மானசா சினிமாவிற்கு பாய் சொல்லினார்.

இன்றைய ஃபோட்டோ கேலரியின் விக்ராந்தின் க்யூட் ஃபேமலி புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.

விக்ராந்தின் நெருங்கிய நண்பர்களான விஷ்ணு விஷால், விஷால், வரலட்சுமி ஆகியோர் மானசாவிற்கு நெருக்கமானவர்கள் தான்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor vikranth family photos vikranth wife actor vijay family

Next Story
Rasi Palan 25th September 2019: இன்றைய ராசிபலன்Rasi Palan 25th September 2019: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com