Actress Aishwarya Youtube Channel Sound Saroja Multi Mommy : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும், மற்றும் தமிழ் நெடுந்தொடர்களிலும் நடித்துப் பல ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் ஐஸ்வர்யா. குடும்ப சூழ்நிலை காரணமாக நடிப்பதிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தாலும், தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் சமையல் மூலம் ஈர்த்திருக்கிறார்.
ஒரு வருடத்திற்கு முன்பு ‘சவுண்ட் சரோஜா’ எனும் பெயரில் சேனல் உருவாக்கி, வித்தியாச கெட்-அப்பில் பல சுவாரசிய வீடியோக்களை பதிவேற்றி, 1 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்றார் ஐஸ்வர்யா. அந்த சேனல் இருப்பது ஐந்தாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்றதை அடுத்து, நடிகை கவுதமியோடு இணைந்து கொண்டாடினார். மேலும், தொடர்ச்சியாகப் பல வித்தியாச ரெசிபிக்களை அப்லோட் செய்தார்.
வீகன் எனும் ஒருவித உணவு முறையைப் பின்பற்றும் இவர், பல வீகன் ரெசிபிக்களை இந்த சேனலில் செய்து காட்டி அசத்தினார். மிகவும் சுவாரசியமாக நகர்ந்துகொண்டிருந்த இந்த சேனலிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் ஐஸ்வர்யா விலகியுள்ளார். சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சவுண்ட் சரோஜா சேனலிலிருந்து ஐஸ்வர்யா விலகி, மல்டி மாமி (Multi Mommy) எனும் சேனலை தொடங்கினார்.
இந்த சேனலில், தன்னுடைய தனிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள், சமையல் வீடியோக்கள், ஆர்கானிக் சோப் செய்முறை, மிமிக்ரி, மோனோ ஆக்டிங், வார்ட்ரோப் மற்றும் ஹோம் டூர் உள்ளிட்ட பல கன்டென்ட்டுகளை கொடுத்து அசத்துகிறார். என்றாலும் இப்போதுவரை சுமார் ஐம்பதாயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் மட்டுமே இந்த மல்டி மாமி சேனலில் உள்ளனர். மற்ற சமையல் சேனலிலிருந்து இவருடைய ரெசிபிக்கள் வித்தியாசமாக இருந்தாலும், வியூஸ்கள் என்னவோ மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. முன்புபோல, ஏதாவது கான்செப்ட் உருவாக்கிப் பதிவு செய்தால் நல்ல ரீச் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil