/indian-express-tamil/media/media_files/2025/08/14/wmremove-transformed-2-2025-08-14-14-29-31.jpeg)
Actress Akhila Pregnancy Health Tips
பொதுவாக, கர்ப்ப காலத்தில் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பலர் செய்யும் தவறுகள் ஏராளம். அரிசி, காய்கறிகள் மற்றும் புரதச்சத்து போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பதால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. சிலர் பழங்களை மட்டுமே உண்பதால், உடலுக்குத் தேவையான மற்ற சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
கர்ப்ப காலத்தில் தான் எப்படி ஆரோக்கியமாக இருந்தேன் என்பது குறித்து நடிகை அகிலா சமீபத்தில் பகிர்ந்த விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
"என் கர்ப்ப காலத்துல, இந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை எனக்கு ரொம்பவே உதவியா இருந்துச்சு. பல பேர் என்ன பண்றாங்கன்னா, கர்ப்பமானதும் உடனே சாப்பாட்டை குறைக்கணும்னு நினைச்சு, சாதத்தையே சாப்பிடாம இருப்பாங்க. காய்கறிகள், புரதம்னு தேவையான எதுவும் எடுத்துக்க மாட்டாங்க. நிறைய பேர் பழங்களை மட்டுமே சாப்பிட்டு நாள் முழுக்க இருப்பாங்க.
ஆனா, ஒரு குறிப்பிட்ட உணவை மட்டுமே நம்பி நாம வாழ்ந்தோம்னா, அது நம்ம உடம்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏன்னா, நம்ம உடல் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட உணவு முறைக்கு பழகியிருக்கும். நம்ம உடம்புக்குள்ள இருக்குற செல்கள் எல்லாமே அதுக்கு ஏத்த மாதிரி மாறி இருக்கும். அதை திடீர்னு நீங்க மாத்துனீங்கன்னா, உடம்பு ரொம்பவே சிரமப்படும். அப்போதான் அதிகமா மூட் ஸ்விங்ஸ் வரும். டயட்ல இருக்குற பலருக்கும் இந்த மூட் ஸ்விங்ஸ் வர்றதுக்கு முக்கிய காரணமே இதுதான்.
நம்ம வழக்கமா சாப்பிடுற சாப்பாட்டை திடீர்னு நிறுத்துறப்போ, உடலுக்கு அது ஒத்துக்காது. மனசும் அதை ஏத்துக்காது. இந்த உள்மனப் போராட்டம்தான் நமக்குள்ள என்ன நடக்குதுன்னு புரியாம, அதை அடுத்தவங்ககிட்ட கோபமா காட்டுறதுக்கு காரணமா அமைஞ்சிடும்.
நான் எப்பவும் எல்லாவிதமான உணவையும் எடுத்துக்கிறதை வழக்கமா வச்சிருப்பேன். இது காலைல டிபன் செய்யுற வேலை இல்ல, சாப்பிடற வேலை இல்ல. லஞ்சுக்கு ஒரு வெஜிடபிள், நான்வெஜ் செஞ்சா அதையே ராத்திரிக்கும் வச்சுக்குவேன். இது என்னோட வாழ்க்கை முறையா இருந்துச்சு. இதனால என்னோட கர்ப்ப காலத்துல எல்லா ஊட்டச்சத்துக்களும் எனக்கு கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு.
மீன், கோழி, ஆட்டுக்கறின்னு புரதமும், சத்துக்களும் கிடைக்குது. காய்கறிகள் நிறைய சாப்பிடறதால நார்ச்சத்து கிடைக்குது. இப்படி எல்லா உணவையும் சேர்த்துக்குறப்போ, நமக்கு எந்த ஊட்டச்சத்துக் குறைபாடும் வராது. அப்புறம் எதுக்கு சப்ளிமென்ட்ஸ் எல்லாம்?" என்கிறார் அகிலா.
நடிகை அகிலாவின் இந்த அனுபவம், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. சமச்சீரான உணவு, மன அமைதி மற்றும் வழக்கமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு மிகவும் அவசியமானவை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.