3 வெண்டைக்காய், கொஞ்சமாக தயிர்; நடிகை அம்பிகா சொல்லும் ஸ்கின் கேர் டிப்ஸ்!
நடிகை அம்பிகா தான் பின்பற்றும் சரும பராமரிப்பு முறை குறித்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெண்டைக்காய் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
நடிகை அம்பிகா தான் பின்பற்றும் சரும பராமரிப்பு முறை குறித்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, வெண்டைக்காய் மற்றும் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் ஃபேஸ்பேக்கை பயன்படுத்தலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
சினிமா பிரபலங்களை பார்க்கும் போது பெரும்பாலும் நமக்கு ஒரு கேள்வி எழும். எப்போது பார்த்தாலும் எப்படி எவ்வளவு பொலிவாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கிறார்கள் என்று நமக்கு தோன்றும். நிறைய நேரத்தில் அவர்கள் மேக்-அப் போட்டிருந்தாலும், அவர்களது சரும பராமரிப்பு முறை குறித்து அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும்.
Advertisment
நடிகர்கள் மற்றும் நடிகைகள் எடுத்துக் கொள்ளும் உணவுகள், அவர்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்ததாக இருப்பதால், இத்தகைய முகப்பொலிவு இருப்பதாக நாம் நினைப்போம். அதில் உண்மை இருந்தாலும் கூட, சாமானியர்களும் பின்பற்றக் கூடிய சில விஷயங்களை தாங்களும் பின்பற்றுவதாக அவர்களில் சிலர் கூறுகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை அம்பிகாவும் ஒரு ஸ்கின் கேர் டிப்ஸை தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் என்று சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து தற்போது சீரியலில் பிஸியாக இருக்கும் அம்பிகா, தான் பின்பற்றக் கூடிய ஒரு சூப்பர் சரும பராமரிப்பு முறையை பகிர்ந்து கொண்டார். இதனை வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்கள் கொண்டு செய்யலாம்.
அதன்படி, மூன்று பிஞ்சு வெண்டைக்காய்கள் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் நமக்கு தேவையான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை நம் முகத்தில் மெதுவாக கீழே இருந்து மேல் புறம் நோக்கி தடவ வேண்டும். அதன் பின்னர், இந்த ஃபேஸ்பேக் காய்ந்ததும் ஈரத்துணி கொண்டு துடைத்து விடலாம்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ்பேக்கை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம் என்று நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்யும் போது நம் முகம் பொலிவாக மாறத் தொடங்கும்.
நன்றி - SHERRY'S HOME Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.