அவள் அப்படி ஒன்றும் அழகில்லை... நடிகை அஞ்சலியின் மறக்க முடியாத முகங்கள்!!!

நா, முத்துக்குமார் எழுதிய அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடம் அஞ்சலிக்கு மட்டுமில்லை பலருக்கும் இன்று வரை மிகவும் பிடித்தமான பாடல் தான்.

தமிழ் சினிமாவில் சில முகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அந்த கதாபாத்திரத்தை நடிகையாக மட்டும் பார்த்திடாமல் அவர்களை தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகவே எடுத்துக் கொள்வார்கள்.அந்த வகையில் தங்கள் வாழ்க்கையோடு பயணிக்கும் காதலியாகவும், தங்கையாகவும், தோழியாகவும் நிஜமாகவே உணர வைத்த கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகை அஞ்சலி.

அழகான தமிழ் முகம். யதார்த்தமான நடிப்பு. அட யாருடா இது பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரியே இருக்காங்கனு தனது முதல் படத்திலியே கேட்க வைத்தவர் தான் நடிகை அஞ்சலி. புதுமுக நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை பலருடன் நடித்துள்ள நடிகை அஞ்சலி இன்று தனது 32 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தியாக, எங்கேயும் எப்போதும் படத்தில் மணிமேகலையாக ரசிகர்கள் மனதில் ஆழமான ஒரு இடத்தை பிடித்திருந்த அஞ்சலி சமீபகாலமாக சொல்லி கொள்ளுமான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. அஞ்சலி நடித்த மறக்க முடியாக கதாபாத்திரங்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு….

1. கற்றது தமிழ் – ஆனந்தி

இரட்டை ஜடை, சிவப்பு நிற பருக்கள், முகத்தில் சொல்ல முடியாத ஏக்கம், ஜீவாவை பார்க்கும் போது மட்டும் அழகான சிரிப்பு என்று படத்தில் அஞ்சலி தோன்றும் அனைத்து இடங்களையும் பிரமாதமாக காட்சிப்படுத்திருப்பார் இயக்குனர் ராம்.

2. அங்காடி தெரு – கனி

சென்னை ரெங்கநாதன் தெருவில் இருக்கும் அனைத்து துணிக்கடையிலும், பாத்திரக்கடையிலும், நகைக்கடையிலும் கனி போன்ற பெண்ணை கட்டாயம் பார்த்து இருப்போம். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் கதை நம்க்கு தெரியாது. அதை அப்படியே கண் எதிரே காட்டியவர் இயக்குனர் வசந்தபாலன். படத்தில் நா, முத்துக்குமார் எழுதிய அவள் அப்படி ஒன்றும் அழகில்லை பாடம் அஞ்சலிக்கு மட்டுமில்லை பலருக்கும் இன்று வரை மிகவும் பிடித்தமான பாடல் தான்.

3. எங்கேயும் எப்போதும் – மணிமேகலை

எம். சரவணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சேவிலியர் கதாபாத்திரத்தில் மணிமேகலை என்ற பெண்ணாக அஞ்சலி நடித்திருப்பார். படம் முழுக்க சுடிதார், புடவை, நீளமான முடி என மற்ற எல்லா படங்களை காட்டியிலும் அஞ்சலி இந்த படத்தில் கூடுதல் அழகாகவே தெரிவார். குறிப்பாக ஜெய்யிடம் பேசும் காட்சிகள், காதல் சொல்லும் காட்சிகள், ஜெய்யை மிரட்டும் காட்சிகள் என படம் முழுக்க அஞ்சலி மணிமேகலையாகவே வாழ்ந்து இருப்பார்.


4. வத்திக்குச்சி – மீனா

இதில் அஞ்சலியின் நடிப்பு மற்ற படங்களை விட மாறுப்பட்டு இருக்கும். ஸ்போக்கன் இங்கீலிஷ் க்ளேஸ்க்கு போறத கூட காலேஜ் போற அளவுக்குன் ப்ல்டப் காட்டியிருப்பார் அஞ்சலி. குறிப்பாக தப்பு தப்பா இங்கீலிஷ் பேசும் அழகும் இருக்கே..

5. இறைவி – பொன்னி

பெண்களின் மனதில் இருக்கும் கனவுகள்,ஆசைகள், எதிர்பார்ப்புகள் எதையும் புரிந்துகொள்ளமால் ஆண் என்கிற திமிரில், அகம்பாவத்தில் ஆண்கள் செய்யும் சில தவறுகளால் அவர்கள் சார்ந்த பெண்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை,இன்னல்களை பற்றியே படமே இறைவி. இதில் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

×Close
×Close