சருமத்தைப் பராமரிப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு முக்கிய பகுதியாகும். பலரும் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களின் பளபளப்பான சரும அழகைப் பார்த்து, அவர்களின் அழகு ரகசியங்களை அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த வகையில், நடிகை ஜனனி அசோக் குமார் தனது சருமப் பராமரிப்பு குறித்து இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
அவருடைய தினசரி சருமப் பராமரிப்பில் தவறாமல் பயன்படுத்தும் இரண்டு சீரம்கள் இங்கே.
என்னோட ஸ்கின் கேர்ல இந்த ரெண்டு சீரம் கண்டிப்பா யூஸ் பண்ணுவேன். ஹைட்ரேஷன்க்காக நான் ஹயலுரோனிக் ஆசிட் யூஸ் பண்ணுவேன். அது தினமும் யூஸ் பண்ணுவேன். அப்புறம் இரவு நேரத்துல ரெட்டினால் யூஸ் பண்ணுவேன். இது ரெண்டுமே ரொம்ப முக்கியம். வயசாக ஆக நம்ம ஸ்கின்ல அந்த போர்ஸ் எல்லாம் கம்மி பண்றதுக்கு ரெட்டினால் கண்டிப்பா யூஸ் பண்ணனும். அதுதவிர மாய்ஸ்சரைஸ் பண்ணனும். சன்ஸ்கிரீன் ரெகுலரா யூஸ் பண்ணனும். அவ்வளவுதான், என்று ஜனனி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.