நான் நல்ல உயரம்; அந்த நடிகர் குள்ளமா இருந்ததால என்கூட நடிக்க மாட்டேன்னு சொன்னாரு- நடிகை பாரதி மெமரீஸ்

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற அப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற அப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Bharathi

Actress Bharathi

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஒரு நடிகை, பாரதி. தமிழ் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

Advertisment

1966 ஆம் ஆண்டு, தமிழ் திரையுலகில் அவர் அறிமுகமானது ஒரு பிரமாண்டமான படத்தில்தான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உடன் "நாடோடி" திரைப்படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில், மீண்டும் எம்.ஜி.ஆர் உடன் "சந்திரோதயம்" படத்திலும் நடித்தார். அந்தப் படங்களின் வெற்றிகள் பாரதிக்கு தமிழ் திரையுலகில் ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தன.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற அப்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் அவர் நடித்திருக்கிறார். "உயர்ந்த மனிதன்" படத்தில் சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த கௌரி என்ற கதாபாத்திரம், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

Advertisment
Advertisements

கன்னட நடிகர் விஷ்ணுவர்தனை மணந்த பிறகு, கன்னட சினிமாவில் "தங்காரத மனுஷ்யா" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு, இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. 

'அவள் விகடன்' யூடியூப் சேனலில் இடம்பெற்ற ஒரு சமீபத்திய நேர்காணலில், பாரதி தனது திரையுலகப் பயணம், அதில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் சக நடிகர்களுடனான உறவு குறித்து மனம் திறந்து பேசினார்.

”நான் நல்ல உயரம். அதனாலேயே எனக்கு பொருத்தமான ஹீரோக்களை தேர்ந்தெடுக்கறதுல சில சமயம் சவால்கள் இருந்துச்சு. எனக்கு சிவக்குமார் ரொம்ப பிடிக்கும். இப்போவும் ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல நட்பு இருக்கு. ஆனா உயரம் காரணமா அவர் என்கூட ரெண்டு படங்கள்ல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. அதேபோல நாகேஷூக்கும் இந்த உயரம் ஒரு பிரச்னையா இருந்தது. 

ஆந்திரா, கர்நாடகான்னு தென்னிந்திய சினிமாவுல என்.டி.ராமாராவ், கிருஷ்ணன் ராஜு, ஷோபன் பாபுன்னு பல பெரிய நடிகர்களோட நடிச்சிருக்கேன். அவங்களுக்கெல்லாம் நல்ல உயரம். அதனால அவங்களோட நடிக்க எனக்கு ரொம்பவே கம்ஃபர்டபிளா இருந்துச்சு. ஒருவேளை மற்ற நடிகர்களுக்குச் சற்று உயரம் குறைவாக இருந்தாலும், இயக்குநர் ஷாட் எடுக்கும்போது அதற்கேற்ப சரிசெய்துவிடுவார்”, என்று நடிகை பாரதி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: