பெண்களுக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கை ரொம்ப அவசியம் – தேவயானி ஷேரிங்ஸ்!

Actress Devayani about women in Film industry Tamil News வெற்றி பெருகிறோமோ தோல்வி அடைகிறோமோ, நம்முடைய முயற்சி அதில் முழுமையாக இருக்கவேண்டும்.

Actress Devayani about women in Film industry Tamil News
Actress Devayani about women in Film industry Tamil News

Actress Devayani about women in Film industry Tamil News : 90’ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம்வந்தவர், இன்றும் அதே பொலிவுடன் சின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருப்பவர் தேவயானி. எவ்வளவு வயதானாலும் நடிகைகள் மட்டும் எப்படி இன்றும் அதே இளமை தோற்றத்தில் இருக்கின்றனர் என்பது பலருக்குள் எழும் கேள்வி. இவ்வளவு ஆண்டுகள் திரைத்துறையில் தான் கடந்து வந்த பாதைகள் மேட்டரும் தன்னுடைய சரும பராமரிப்பு ரகசியங்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

“நான் சினிமா துறைக்கு வந்ததுக்கு காரணமே என் அம்மாதான். அவங்க ரொம்ப தைரியமானவங்க. எனக்கு ரொம்ப பக்கபலமாக இருந்தாங்க. என்கூடவே எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்கூடவே பயணம் செஞ்சாங்க. மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும், திரைத்துறையில் எப்படி தைரியமாக இருக்கனும், பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் போன்றவற்றை கற்றுக்கொடுத்தது அம்மா. நான் வேலை பார்த்த எல்லா படங்களும், சீரியல்களும் எனக்கு பாஸிட்டிவாகவே இருந்தன. எங்கும் உண்மையான அன்பை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். எல்லாவற்றையும்விட பெண்களுக்கு சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை அவசியம். அது எந்தத் துறையில் இருந்தாலும் சரி.

நான் என்னுடைய மகள்களுக்குப் பொறுப்போடு இருக்கனும் மற்றும் எந்த விஷயம் செய்தாலும் அதில் 100 சதவிகிதம் முயற்சி செய்யுங்கள் என்பத்தைதான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். வெற்றி பெருகிறோமோ தோல்வி அடைகிறோமோ, நம்முடைய முயற்சி அதில் முழுமையாக இருக்கவேண்டும். இதை எப்போதும் அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருப்பேன்.

அழகு குறிப்பு சொல்கிற அளவுக்கு நான் எந்த விதமான சரும பராமரிப்பு பொருள்களையும் பயன்படுத்த மாட்டேன். அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. என்னுடைய மாய்ஸ்ச்சரைசர், க்ளென்சர், மேக்-அப் ரிமூவர் என எனக்கு எல்லாமே தேங்காய் எண்ணெய் மட்டும்தான். ஆரோக்கியமான தலைமுடிக்கும் தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துவேன். நான் சின்ன வயசுல இருந்தே இதை மட்டும்தான் உபயோகப்படுத்துவேன்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actress devayani about women in film industry tamil news

Next Story
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பீட்ரூட் சட்னி; இட்லி, தோசை, சாதத்துக்கு வச்சு சாப்பிடலாம்Beetroot chutney recipes in tamil: beetroot chutney making in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com