இன்றைய ஃபேஷன் உலகில், புதுப்புது மேக்கப் பிராடக்ட்ஸ், அவற்றை நீக்குவதற்கான விலை உயர்ந்த ரிமூவர்களும் சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன. ஆனால், இந்த வேகமான ட்ரெண்டுகளுக்கு மத்தியில், ஒரு நடிகை இன்றும் தனது பாரம்பரிய அழகு ரகசியத்தில் உறுதியாக நிற்கிறார் என்றால் அது தேவயானிதான். தனது எவர்கிரீன் சிரிப்பாலும், இயல்பான அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்த தேவயானி, தனது அழகு ரகசியம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
Advertisment
"நான் இப்போ நடிகையா இருக்கறதுனால, மேக்கப் போடுறது தவிர்க்க முடியாததுதான். ஆனா, நான் வெளியில போகும்போது ரொம்ப சிம்பிளா இருப்பேன், மேக்கப்பே போட மாட்டேன். சரி, ஷூட்டிங்ல போட்ட மேக்கப்பை எப்படி எடுப்பேன்? அதுக்குதான் பல பிராண்ட் மேக்கப் ரிமூவர்கள் இருக்கேன்னு எல்லாரும் கேட்கலாம். ஆனா, நான் அவற்றை வாங்குவதே இல்லை," என்று தேவயானி கூறுகிறார்.
அப்படியானால், அவர் பயன்படுத்தும் அந்த ரகசிய பொருள் என்ன? மிகவும் எளிமையானது, அனைவரது வீட்டிலும் இருக்கும் தேங்காய் எண்ணெய்தான் அது.
"தேங்காய் எண்ணெய்... அவ்வளவுதான்! ரொம்ப சிம்பிளான ஒரு விஷயம். எங்க தாத்தா, பாட்டி காலத்துல இருந்து அவங்க யூஸ் பண்ண ஒரு பொருள். அதனால நானும் அதையேதான் பயன்படுத்துறேன். என்னைப் பொறுத்தவரைக்கும், ஒரு பொருளை நான் எத்தனை வருஷமா யூஸ் பண்றேனோ, அதைத்தான் தொடர்ந்து யூஸ் பண்ணுவேன். புதுசா வர்ற விளம்பரங்களை பார்த்து, புதுசா எந்தப் பொருளையும் உடனே நான் ட்ரை பண்ண மாட்டேன். ஏன்னா, அதெல்லாம் நம்ம உடம்புக்கு எந்த அளவு பொருத்தமா இருக்கும்னு தெரியாது. நம்ம உடம்புக்கு அது சூடாகுமா, நம்ம ஹெல்த்துக்கு அது சரியா வருமான்னு முதல்ல பார்க்கணும்," என்கிறார் தேவயானி.
Advertisment
Advertisements
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் மேக்கப் ரிமூவர் ஆகும். இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், முகப்பரு மற்றும் பிற சருமப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது. ரசாயனங்கள் இல்லாத தேங்காய் எண்ணெய், சருமத்திற்கு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.