மஞ்சக்காட்டு மைனாவுக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ! - காயத்ரி ஜெயராம் யூடியூப் சேனல் எப்படி?
Actress Gayatri Jeyaram Youtube Channel Review இந்த கொரோனா காலகட்டத்தில் எப்படி சந்தோஷமாகவும் பாசிட்டிவ்வாகவும் இருக்கவேண்டும் என்கிற காணொளி மக்களால் அதிக வரவேற்பைப் பெற்றது.
Actress Gayatri Jeyaram Youtube Channel Review : 'மஞ்சக்காட்டு மைனாவாக' 90'ஸ் கிட்ஸ்களின் இதயத்தில் கூடுகட்டி குடியிருந்தவர் காயத்ரி ஜெயராம். சில திரைப்படங்களே நடித்திருந்தாலும், இன்றும் பலரின் ஃபேவரைட் நடிகைகளின் லிஸ்டில் ஒருவராக இருக்கிறார். தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, உபயோகமான வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.
Advertisment
இயற்கை மீது அதிகப் பற்று கொண்ட காயத்ரி, தன்னுடைய தோட்டத்தில் வளர்க்கும் செடி கொடிகளைப் பற்றிய காணொளிகள்தான் அதிகம். 'க்ரோ வித் மீ' எனும் பெயர் கொண்ட இவருடைய இந்த வித்தியாச சீரிஸில், மரம், செடி நடுவதற்கு எந்த விதமான மண் சிறந்தது, வெள்ளரிக்காய், கீரை, அவகாடோ உள்ளிட்ட காய்கறி மற்றும் பழ வகைகளை எப்படி விதைப்பது உள்ளிட்டவற்றைக் காணொளியில் பதிவு செய்திருக்கிறார். இவை அனைத்தும் தன் வீட்டு மொட்டைமாடியில்தான் பயிரிட்டு இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
'காயத்ரி ஜெயராம்' என தன்னுடைய பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலில் இதுவரை 70 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்ஸ் மட்டுமே உள்ளனர். ஆனால், பல காணொளிகள் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. அதிலும், இவருடைய ஹோம் டூர் வீடியோ நான்கு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று இன்றும் அதிகமான நபர்களால் பார்க்கப்படுகிறது.
சேனல் தொடங்கி ஆறு மாதங்களே ஆன நிலையில், மேக் அப் காணொளிகள், சமையல் வீடியோக்கள், ஃபிட்னெஸ் மற்றும் வீட்டை எப்படி அழகாக அடுக்கி வைப்பது உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, இந்த கொரோனா காலகட்டத்தில் எப்படி சந்தோஷமாகவும் பாசிட்டிவ்வாகவும் இருக்கவேண்டும் என்கிற காணொளி மக்களால் அதிக வரவேற்பைப் பெற்றது.
பயனுள்ள பல காணொளிகள் இவருடைய சேனலில் இருந்தாலும், சுவாரசிய எடிட்டிங் மற்றும் என்டெர்டெயின் கன்டென்ட் இல்லை என்பதால் என்னவோ மிகவும் குறைவான சப்ஸ்க்ரைபர்ஸ்களை பெற்றிருக்கிறார். கொஞ்சம் நகைச்சுவை கலந்த ஃபன் கன்டென்ட் கொடுத்தால் இவருடைய சேனலும் ட்ரெண்டிங்கில் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil