3 மாதங்களில் 9 கிலோ எடை குறைப்பு... நடிகை வித்யா பாலனுக்கு நன்றி கூறிய ஜோதிகா: காரணம் இதுதான்!

"இத்தனை ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது அதிக ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் உணர்கிறேன்" என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் மூலம் இது சாத்தியமானதாக அவர் கூறுகிறார்.

"இத்தனை ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது அதிக ஆற்றலுடனும், நம்பிக்கையுடனும் உணர்கிறேன்" என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் மூலம் இது சாத்தியமானதாக அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Jyotika and Vidya Balan

மார்ச் 2025-ல் தனது உடல் எடை குறைப்பு பயிற்சியை நடிகை ஜோதிகா தொடங்கினார். குறிப்பாக, உடல் எடை குறைப்பு மட்டுமின்றி இதன் மூலம் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தாம் யாரென்று அறிய இது உதவியதாக அவர் கூறுகிறார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Thank you to actor Vidya Balan’: Jyotika sheds 9 kgs in 3 months, says strength training helps lose weight for those over 40

 

Advertisment
Advertisements

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா பதிவிட்டுள்ளார். "3 மாதங்களில் 9 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறேன். அமுராவிற்கு மிக்க நன்றி. நான் யார் என்று அறிய இது உதவியது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை சரியான திசையில் அழைத்துச் சென்றதற்காக நடிகை வித்யா பாலனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் ஜிம்மிற்குச் செல்லாமல் அதிக உடல் எடையை குறைப்பது தொடர்பாக வித்யா பாலன் பேசியிருந்தார். இது தனக்கு உத்வேகமாக இருந்ததாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னையை தளமாகக் கொண்ட அமுரா ஹெல்த் நிறுவனத்தில் உள்ள அதே நிபுணர்களை தொடர்பு கொண்ட ஜோதிகா, தனது உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

 

 

மேலும், "உடல் எடையை கட்டுப்படுத்துவது எனக்கு எப்போதுமே ஒரு போராட்டமாக இருந்தது. கடுமையான உடற்பயிற்சிகள், டயட்கள் மற்றும் இடைப்பட்ட உண்ணாவிரதம் என எதுவுமே பலன் அளிக்கவில்லை. ஆனால், அமுராவுடன் இணைந்த பின்னர் இது சாத்தியமாகி இருக்கிறது" என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

"இத்தனை ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது அதிக ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன்" என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் மூலம் இது சாத்தியமானதாக அவர் கூறுகிறார்.

தசைகளை வலிமையாக்கும் பயிற்சி எப்படி எல்லாவற்றையும் மாற்றியது?

தனது பயிற்சியாளர் மகேஷுக்கும் நடிகை ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார். "எடைப் பயிற்சி ஒரு சுதந்திரமான எதிர்காலத்திற்கு முக்கியமாகும். குறிப்பாக, பெண்களுக்கு இது அவசியம் தேவை. நம் மீது அன்பு செலுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் போது, உடல் எடை தானாகவே குறையும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தத்துவத்தை பெங்களூரில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையின் முன்னணி பிசியோதெரபிஸ்ட் ஷாஜியா ஷதாப் ஏற்றுக் கொள்கிறார். "குறிப்பாக, 40 வயதிற்குப் பிறகு, நமது வளர்சிதை மாற்றம் குறைகிறது. மேலும், ஹார்மோன் மாற்றங்கள் உடல் எடை குறைப்பை மிகவும் சவாலாக ஆக்குகின்றன" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். "தசைகளுக்கான பயிற்சி, அதனை மெலிதாக மாற்ற உதவுகின்றன. இது ஓய்வு நேரத்தில் நீங்கள் எரிக்கும் கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு இயற்கையான ஊக்கத்தை அளிக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கார்டியோ மட்டும் கொழுப்பை கரைக்க சரியான வழி என்று கருதுவது தவறு என்று அவர் அறிவுறுத்துகிறார். "இதய ஆரோக்கியத்திற்கு கார்டியோ சிறந்தது. ஆனால், நிலையான உடல் எடை குறைப்புக்கு தசைகளை வலிமையாக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

40 வயதில் உடல் எடை குறைப்பு எவ்வளவு சவாலானது?

20 வயதில் உடல் எடையை குறைப்பதற்கும், 40 வயதில் உடல் எடையை குறைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஹார்மோன்கள் மாற்றமடைகின்றன, தூங்கும் நேரம் மாறுபடுகிறது. இது மட்டுமின்றி மன அழுத்தம் அதிகரிக்கிறது. இவை உடல் எடை குறைப்பை சவாலாக மாற்றுகின்றன. 

அந்த வகையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

1. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 2-3 முறை தசைகளை வலிமையாக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

2. நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

3. போதுமான அளவு புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. உடற்பயிற்சியை போன்று சீரான தூக்கமும் அவசியம். 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவை அனைத்தையும் அவசியம் பின்பற்ற வேண்டும். இதன் முன்னேற்றம் மெதுவாக இருந்தாலும், நிச்சயம் பலன் அளிக்கும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Jothika

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: