scorecardresearch

தேவயானி மாதிரி இவரும் ஹிட் ஆவாரா? சன் டி.வி சீரியலில் அஜித் ஹீரோயின் ரீ என்ட்ரி!

கோலங்கள் சீரியலை இயக்கி புகழடைந்த திருச்செல்வம் புதிதாக இயக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை கனிகா நடிக்கிறார்.

Actress Kaniha
Actress Kaniha – Ethirneechal Serial

நடிகை கனிகா சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய படங்களில் நடித்தார்.

2006ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், வெளியான வரலாறு படத்தில் அஜித் ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனர். கனிஹா பின்னணிப் பாடல், டப்பிங்கிலும் கூட  பணிபுரிந்திருக்கிறார்.

கனிகா நடிகையாக மாறுவதற்கு முன்பு ஒரு தொழில்முறை பாடகியாக இருந்ததால், தனது முதல் படமான ஃபைவ் ஸ்டாரில்’ தீம் பாடலைப் பாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். பிறகு, டப்பிங் கலைஞரானார், சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசா, அன்னியனில் சதா மற்றும் சிவாஜி: தி பாஸ் படத்தில் ஸ்ரேயா சரண் ஆகியோருக்கு டப்பிங் கொடுத்தார்.

பிறகு கனிகா, ஜூன் 2008 இல் ஷியாம் ராதாகிருஷ்ணனை மணந்தார். இவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளான். திருமணத்துக்கு பிறகு, மலையாள படங்களில் நடித்து வந்த கனிகா, இப்போது, தமிழிலும் விக்ரம் உடன் கோப்ரா, விஜய்சேதுபதியுடன் மாமனிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்போது சன் டிவியில் பிப்.7 முதல் புதிதாக ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மூலம் கனிகா தமிழ் சின்னத்திரையிலும் கால் பதிக்கிறார். கோலங்கள் சீரியலை இயக்கி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை  பெற்ற திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்குகிறார். கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகை மதுமிதா ‘ஜனனி’ கேரக்டரில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ’பிரியாத மனம் வேண்டும்’ என்ற தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

சீரியல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. ஜனனி ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நல்ல படிக்கும் பெண், அவளது கண்டிப்பான தந்தை நாச்சியப்பன்’ மகள் படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறார். தன் கனவுகளை வெல்வதற்காக, முரண்பாடுகளை எதிர்த்து ஜனனி போராடும் கதைதான் இந்த கதை” என்கிறார் இயக்குனர்.

பாம்பே ஞானம் என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை ஞானம் பாலசுப்ரமணியனும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்., தொகுப்பாளினி பிரியதர்ஷினி மற்றும் கனிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர்.

திருச்செல்வம் இயக்கத்தில், கோலங்கள் சீரியலில் அபி கேரெக்டரில் நடிகை தேவயானி நடித்தார். இந்த சீரியல் தேவயானிக்கு மிகப்பெரிய அளவில் புகழை தேடி தந்தது. அதில் தொல்ஸ், அபி நட்புக்கு இன்றுவரை, பலர் ரசிகர்களாக உள்ளனர். அதற்கு முன்பும் சரி, பிறகும் சரி, ஒரு ஆண், பெண்ணின் ஆத்மார்த்தமான நட்பு இதுவரை எந்த சீரியலிலும் காட்டப்படவில்லை.

இப்போது அதே இயக்குனரின் படைப்பில் கனிகா நடிக்கிறார். அதனால் கூடிய விரைவில் கனிகாவும் தமிழ் குடும்பங்கள் மத்தியில் இடம்பிடித்து விடுவார் என ரசிகர்கள் இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Actress kaniha is starring in the ethir neechal serial after 14 years