நம்மில் பலருக்கும் திரையில் தோன்றும் சினிமா நட்சத்திரங்களை போன்று காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், திரை நட்சத்திரங்களால் செலவிடப்படும் தொகை, அவர்கள் வல்லுநர்களிடம் இருந்து பெறும் அறிவுரைகளை சாமானிய மக்களால் நினைத்து பார்க்க முடியாது.
ஆனால், சில அடிப்படை விஷயங்களை கையாள்வதன் மூலம் நம்மால் சீரான சரும பராமரிப்பை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், நடிகை லைலா தான் பின்பற்றும் சரும பராமரிப்பு குறித்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தனது முகத்தை தண்ணீர் கொண்டு மட்டுமே கழுவுவதாக நடிகை லைலா குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இரசாயனங்கள் கலந்த பொருள்களை பயன்படுத்துவது சரும பராமரிப்பில் அவசியமற்றது என தெரிய வருகிறது.
இதேபோல், தினசரி தேவையான அளவு தண்ணீரை கட்டாயம் தான் குடிப்பதாக நடிகை லைலா தெரிவித்துள்ளார். சரும பராமரிப்பில் உடலில் உள்ள நீர்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல், அது ஆரோக்கியம் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உடற்பயிற்சியை தான் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் லைலா தெரிவித்துள்ளார். நாள்தோறும் இருக்கும் பணிகளுக்கு இடையே, உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதை தவிர்க்க கூடாது. இதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
இப்படி எளிமையான விஷயங்களை, தான் தவறாமல் கடைபிடித்து வருவதாக லைலா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்காக பணம் செலவளித்து கிரீம், சீரம், டோனர் போன்ற பொருள்களை சரும பராமரிப்புக்காக வாங்குவதை விடவும், அன்றாட வாழ்க்கை முறை மாற்றம் மூலம் சரும பராமரிப்பை எளிதாக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.