Advertisment

முதல் படமே ரஜினிக்கு ஜோடி, பிகினி குயின்: 'தில்லு முல்லு' மாதவி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

1981 ஆம் ஆண்டு தில்லு முல்லு படத்தின் மூலம் பாலசந்தர், மாதவியை தமிழுக்கு அழைத்து வந்தார். முதல் படமே ரஜினிக்கு ஜோடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Maadhavi

Actress Maadhavi

தில்லு முல்லு, ராஜபார்வை, டிக் டிக் டிக் போன்ற படங்களில் நடித்த மாதவியை மறக்க முடியுமா..?

Advertisment

80களின் மத்தியில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மாதவிக்கு சிறுவயதில் இருந்தே பரத நாட்டியம் பிடிக்கும், 1000க்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார். அவர் சினிமாவுக்குள் அறிமுகமாகவும் பரத நாட்டியம் தான் முக்கிய காரணம்.

மாதவியின் நடனத்தால் கவரப்பட்ட தாசரி நாராயண ராவ், தான் எடுத்த ’தூர்பு படமாரா’ என்ற தெலுங்குப் படத்தில்  மாதவியை அறிமுகப்படுத்தினார். 1976 இல் இந்தப் படம் வெளியானது.

மாதவி அறிமுகமானது தெலுங்கு திரையுலகில் தான் என்றாலும், அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது தமிழ் சினிமா தான். அதன் ரசிகர்களும் தான்…

Actress Maadhavi instagram

1981 ஆம் ஆண்டு தில்லு முல்லு படத்தின் மூலம் பாலசந்தர், மாதவியை தமிழுக்கு அழைத்து வந்தார். முதல் படமே ரஜினிக்கு ஜோடி.

தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை… கமலுக்கு ஜோடியாக எல்லாம் இன்பமயம், காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம் என பல படங்களில் நடித்து இருவருக்குமே பொருத்தமான கதாநாயகி என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானார்.

குறிப்பாக பிகினி உடையில் மாதவி அவ்வளவு எடுப்பாக அழகாக இருப்பார். அப்போது மற்ற நடிகைகள் செய்ய தயங்கிய ஒரு விஷயம் இது…

’அந்திமழை பொழிகிறது’ பாடலில் மாதவி பிகினியில் தோன்றியது… டிக் டிக் டிக் படத்தில் மாதவியின் பிகினி உடை அன்று சினிமா உலகில் அதிகம் பேசப்பட்டது

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே மாதவி 1996ல் ரால்ப் சர்மா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் பாதி இந்தியர், பாதி ஜெர்மனியர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அவருக்கு பார்மசூட்டிகல் கம்பெனி இருந்ததால் திருமணத்துக்குப் பின் மாதவி நியூ ஜெர்சியில் செட்டிலானார்.

மாதவிக்கு மொத்தம் மூன்று மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் கூடஅவரது மகள் பிரிசில்லா அதிக மதிப்பெண்கள் பெற்று தனது இளங்கலை கல்லூரி படிப்பை முடித்தார். இவரது மதிப்பெண்களை பார்த்து இவருக்கு உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களான ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து மேல் படிப்பில் சேர்வதற்காக அழைப்பும் வந்தது.

அப்போது தனது மகளின் படிப்பு குறித்தும் ஒரு அம்மாவாக தான் பெருமைப்படுவதாக கூறி தனது மகிழ்ச்சியை சோசியல் மீடியா பக்கத்தில் வெளிப்படுத்தினார் மாதவி…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment