சும்மா கொண்டை போட்டது ஃபேமஸ் ஆகிருச்சு: நதியா ஃபேஷன் சீக்ரெட்

படங்களின் போது அணிந்திருக்கும் ஃபிராக்குகள், டிசைன் புடவைகள், என எல்லாவற்றிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நதியா என்றாலே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான ஹேர் ஸ்டைல் தான்.

படங்களின் போது அணிந்திருக்கும் ஃபிராக்குகள், டிசைன் புடவைகள், என எல்லாவற்றிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நதியா என்றாலே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான ஹேர் ஸ்டைல் தான்.

author-image
WebDesk
New Update
Nadhiya

Actress Nadhiya

80-களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. இன்றும், ‘பூவே பூச்சூடவா’ படத்தைப் பார்க்கும்போது, அந்த ஃபிராக் அணிந்த இளமையான நதியா நம் கண்முன் வந்து போகிறார். காலம் கடந்தாலும், அவரது அழகுக்கும், வசீகரத்திற்கும் வயது ஏறியதாகத் தெரியவில்லை. படங்களில் நாம் பார்த்தது போலவே, இன்றும் நதியாவின் முகம் அதே பொலிவுடன் ஜொலிக்கிறது.

Advertisment

நதியாவுக்கு ஃபேஷனில் ஒரு தனி இடம் உண்டு. படங்களின் போது அணிந்திருக்கும் ஃபிராக்குகள், டிசைன் புடவைகள், என எல்லாவற்றிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் நதியா என்றாலே நினைவுக்கு வருவது அவரது தனித்துவமான ஹேர் ஸ்டைல் தான். ‘நதியா கொண்டை’ என்று ஒரு காலத்தில் அது புதிய ட்ரெண்டை உருவாக்கியது. இதுகுறித்து நதியா சமீபத்தில் ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசினார். 

”நான் காலேஜுக்குப் போகும்போது எப்படி டிரஸ் பண்ணுவேனோ, அதே மாதிரிதான் படங்களுக்கும் டிரஸ் செலக்ட் பண்ணேன். சினிமா பத்தி எனக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது. இந்த டிரஸ் போட்டா ஸ்க்ரீன்ல நல்லா இருக்கும், இது போட்டா நல்லா இருக்காதுன்னு எல்லாம் கவனிக்கிறதே இல்லை. எனக்கு எது பிடிக்குமோ, எது கம்ஃபர்டபிளா இருக்குமோ அதைத்தான் போட்டேன்.

Advertisment
Advertisements

ஒரே ஒரு விஷயம் மட்டும் சொன்னாங்க, "ஒரு மஞ்சள் சுடிதார் தேவை.". அதைத் தவிர, எல்லாமே நான்தான் செலக்ட் பண்ணிக்கிட்டேன். அவங்க எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன். ஒருவேளை அதுதான் என் தோற்றத்துக்கு ஒரு ஃபிரெஷ்னஸ் கொடுத்திருக்கலாம். அந்த கொண்டை ஸ்டைல் எப்படி ஃபேமஸ் ஆச்சுன்னும் எனக்குத் தெரியாது. அதுக்குன்னு தனியா ஒரு காரணம் எதுவும் இல்லை.

சும்மா ஷூட் அப்போ ஹேர் ஸ்டைலிஸ்ட் வந்தாங்க. அப்போ எல்லாம் நீளமான விக்குகள் போட்டுதான் ஸ்டைல் பண்ணுவாங்க. நான், "நம்ம ஹேர்லயே என்ன பண்ண முடியும்?"னு கேட்டேன். "சரி, ஒரு கொண்டை போட்டுக்கலாம். அது ஈஸி, சீக்கிரமா ஷாட் ரெடி ஆகும்"னு சொன்னாங்க. சும்மா போட்டுக்கிட்டேன். ஆனா, அது அவ்வளவு பெரிய ஃபேஷன் ட்ரெண்டா மாறும்னு எதிர்பார்க்கவே இல்லை,” என்று நதியா அந்த பேட்டியில் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: