scorecardresearch

ஒரு தாயாக என் மகளுக்கு இதை செய்ய தவறினேன்.. பிரபல நடிகையின் பரபரப்பு வீடியோ!

இந்த கதைக்கும், நந்திதா வெளியிட்ட வீடியோவுக்கும் என்ன தொடர்பு?

ஒரு தாயாக என் மகளுக்கு இதை செய்ய தவறினேன்.. பிரபல நடிகையின் பரபரப்பு வீடியோ!

நடிகை நந்திதா குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

”குமுதா ஹாப்பி அண்ணாச்சி” என்றாலே விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக நம் நினைவில் வந்து நிற்பவர் நடிகை நந்தித்தா தான். அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதாவின் அசுரவதம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும், பெண் குழந்தைக்கு அம்மாவாக நந்திதா நடித்துள்ளார்.

படத்தை பார்த்த பலருக்கும் படத்தின் கதை என்னவென்று தெரிந்திருக்கும். படத்தை பார்க்காதவர்களுக்கு இதோ ஒரு சின்ன க்ளு. ஒரு பெண் குழந்தையை பெற்ற தாய் – தந்தையின் கதை தான் அசுரவதம். இந்த கதைக்கும், நந்திதா வெளியிட்ட வீடியோவுக்கும் என்ன தொடர்பு? என்று கேட்பவர்களுக்கு பதில் இதோ.

இந்த படத்தில் ஒரு தாயாக நந்திதா செய்ய தவறியதை எந்த ஒரு பெற்றோரும் தவறிவிடக் கூடாது என்று அவர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு வீடியோ ஒட்டுமொத்த திரைபிரபலங்களில் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இந்த தகவலை கேட்டு தினம், தினம் தவித்து வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகவும் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடிகை நந்திதா சுமார் 4 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ’பேட் டச்’ ‘குட் டச்’பற்றி பிள்ளைகளுக்கு புரியும்படி விளக்கம் அளித்துள்ளார். வீடியோவில் நந்திதா ப்பேசும் ஒவ்வொரு விஷயமும் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு புரியும்படி விளக்கியுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Actress nandita swetha talks about child abuse