பத்மினி சிஸ்டர்ஸ் ஒரே மாதிரி எடுத்த புடவை… 50 வருஷமா பத்திரமா வச்சுருக்கேன்; நடிகை ஷோபனா

பத்மினி, ராகினி மற்றும் லலிதா என மூன்று பேருமே ஒரே டிசைனில், வெவ்வேறு நிறங்களில் வெவ்வேறு நிறங்களில் எடுத்து உடுத்திய புடவை இது. அந்த புடவையில மூணு பேரும் போட்டோ கூட எடுத்துருக்காங்க.

பத்மினி, ராகினி மற்றும் லலிதா என மூன்று பேருமே ஒரே டிசைனில், வெவ்வேறு நிறங்களில் வெவ்வேறு நிறங்களில் எடுத்து உடுத்திய புடவை இது. அந்த புடவையில மூணு பேரும் போட்டோ கூட எடுத்துருக்காங்க.

author-image
WebDesk
New Update
Padmini saree

Actress Shobana

சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் ஆடை, வெறும் துணி அல்ல. அது ஒரு பொக்கிஷம், ஒரு கதை, ஒரு உணர்வின் பிரதிபலிப்பு. அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை நடிகை ஷோபனா, மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுடனான நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். 

Advertisment

பொதுவாக, ஒரு புடவையை நாம் வாங்கும்போது, அதன் அழகு, தரம், எடை போன்றவற்றைத்தான் பார்ப்போம். ஆனால், ஷோபனா பாதுகாத்து வரும் இந்த புடவை, அந்த அம்சங்களை எல்லாம் தாண்டி, ஒரு ஆழமான நட்பின் அடையாளமாக உள்ளது. இது நடிகை பத்மினி அணிந்த புடவை. சுமார் 50 வருடங்களாக பத்மினி அம்மாவிடம் இருந்த இந்தப் புடவை, இப்போது ஷோபனாவிடம் பத்திரமாக உள்ளது.

”இந்த புடவை பத்மினி அம்மாகிட்ட 50 வருடங்களா இருந்தது. அப்புறம் என்கிட்ட வந்தது. பத்மினி அம்மா எனக்கு இந்த புடவையை அன்போடு கொடுத்தாங்க. இது ரொம்ப ஸ்பெஷலான ஒன்று. புடவை பார்க்க செம கிராண்டா இருக்கும். ஆனா வெயிட்டே இல்ல. ரொம்ப ரொம்ப லேசானது. 

பத்மினி, ராகினி மற்றும் லலிதா மூணு பேருமே ஒரே டிசைனில், வேறவேற கலர்ல எடுத்து உடுத்திய புடவை இது. அந்த புடவையில மூணு பேரும் போட்டோ கூட எடுத்துருக்காங்க. 

Advertisment
Advertisements

saree

பத்மினி அம்மா அமெரிக்காவில் இருந்தபோது, ஷோபனா இந்த சாரீ கட்டி எனக்கு ரொம்ப போர் அடிச்சுட்டு, நீ வச்சிக்கிறீயானு யோசிச்சுக்கிட்டே கேட்டாங்க. நான் கண்டிப்பா வச்சுக்கிறேன் சொல்லி உடனே வாங்கிட்டேன்.  அப்புறம் நாங்க ஒன்னா போட்டோ எடுத்தோம். அவுங்க என்னோட ஆபிஸ்க்கு வருவாங்க. என்னோட நடன நிகழ்ச்சிக்கு வருவாங்க”, என்று நடிகை ஷோபனா தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

saree 1

இந்த அரிய புடவை வெறும் துணி அல்ல; அது ஒரு பொக்கிஷம். ஒரு பெரிய கலைஞரின் அன்பு, நம்பிக்கை, மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதை என அனைத்தையும் சுமந்து நிற்கிறது. இது ஷோபனாவின் அலமாரியில் ஒரு புடவை மட்டுமல்ல, அது அவரது இதயத்தில் உள்ள ஒரு சிறப்பு இடம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: