வொர்க் அவுட், டயட், பியூட்டி சீக்ரெட்ஸ்... ப்ரீத்தி முகுந்தனின் ஃபிட்னெஸ் ஃபார்முலா!

தெலுங்குத் திரைப்படம் 'ஓம் பீம் புஷ்' மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ப்ரீத்தி முகுந்தன். 'ஸ்டார்' படம் மூலம் தமிழில் நுழைந்த இவர், 'ஆச கூட' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.

தெலுங்குத் திரைப்படம் 'ஓம் பீம் புஷ்' மூலம் அறிமுகமாகி, தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ப்ரீத்தி முகுந்தன். 'ஸ்டார்' படம் மூலம் தமிழில் நுழைந்த இவர், 'ஆச கூட' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.

author-image
WebDesk
New Update
Preity Mukhundhan

வொர்க் அவுட், டயட், பியூட்டி சீக்ரெட்ஸ்... ப்ரீத்தி முகுந்தனின் ஃபிட்னெஸ் ஃபார்முலா!

தெலுங்குத் திரைப்படமான 'ஓம் பீம் புஷ்' மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். தங்கத் தமிழச்சியான இவர், இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து, நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழில் 'ஸ்டார்' படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ப்ரீத்தி, தெலுங்கில் 'கண்ணப்பா' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் நாயகியாக மாறியுள்ளார்.

Advertisment

கிட்டத்தட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள ப்ரீத்தி, அதர்வாவுடன் ‘இதயம் முரளி’, ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத படம், அசோக் செல்வனுடன் ஒரு புதிய படம் என பிஸியாக உள்ளார். மலையாளத் திரையுலகிலும் ஹிருது ஹாரூனுடன் 'மைனே பியார் கியா', நிவின் பாலியுடன் 'சர்வம் மாயா' என நடித்து வருகிறார். ப்ரீத்தி நடித்த மியூசிக் ஆல்பமான, சாய் அபயங்கருடன் இணைந்து நடித்த 'ஆச கூட...' பாடல், 300 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

ப்ரீத்தி முகுந்தனின் ஃபிட்னஸ் & பியூட்டி ரகசியங்கள்:

வொர்க் அவுட்ஸ்:

நான் ஒரு தீவிரமான உடற்பயிற்சி ஆர்வலர். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. தினமும் காலையில் யோகாவுடன் தொடங்கும் எனது உடற்பயிற்சி, ஜிம்மில் 2 மணி நேரம் நீடிக்கும். இதில், அரை மணி நேரம் நடைப்பயிற்சியும், அரை மணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளும் அடங்கும். தொடர்ந்து, உடலின் ஸ்டேமினாவை அதிகரிக்கும் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளைச் செய்வேன். சிறு வயதிலிருந்தே முறைப்படி பரதநாட்டியம் பயின்றதால், தினமும் ஒரு மணி நேரம் நடனப் பயிற்சியையும் மேற்கொள்கிறேன். இவைதான் என் வொர்க் அவுட் ரகசியங்கள்.

டயட்:

நான் ஒரு 'ஃபுட்டி' என்பதால், டயட் என்ற பெயரில் உணவைக் கட்டுப்படுத்துவதில்லை. சுவையான உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் எந்த ஹோட்டலில் உணவு நன்றாக உள்ளது என்று சொன்னாலும், உடனே அங்கு சென்று சாப்பிட்டுவிடுவேன். பிரியாணி, பீட்சா, பாஸ்தா, பர்கர், மோமோஸ், சமோசா, வடை பாவ், பாவ் பாஜி, கேக் என எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிடுவேன். மட்டன் கோஷா போன்ற பெங்காலி உணவுகள், லக்னோ மற்றும் தென்னிந்திய உணவு வகைகள் என் விருப்பமானவை. குலாப் ஜாமூன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், டார்க் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். நான் எந்த வகையான உணவு சாப்பிட்டாலும், மறுநாள் அதற்கேற்ற கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவிடுவேன். இதுதான் என் உடலைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

அழகு ரகசியம்:

Advertisment
Advertisements

உண்மையில் பியூட்டி சீக்ரெட்ஸ் என எதுவும் இல்லை. ஆரோக்கியமான சருமம் எனக்கு பரம்பரை வழியாக கிடைத்ததாக நினைக்கிறேன். பொதுவாக, நான் அதிக மேக்கப் போடுவதை விரும்புவதில்லை. ஷூட்டிங் இல்லாத நாட்களில் லைட் மேக்கப் மட்டுமே போடுவேன். எனக்கு வாசனை திரவியங்கள் மீது அதிக ஆர்வம் உண்டு. வீட்டிலேயே நிறைய பிராண்டட் பெர்ஃபியூம்ஸ் வைத்திருக்கிறேன். மேலும், ஆன்ட்டிக் நகை அணிவதையும், விதவிதமான காலணிகளை சேகரிப்பதையும், நெயில் ஆர்ட் செய்வதையும் மிகவும் விரும்புவேன். இதுதான் என்னுடைய அழகு ரகசியம் என்றார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: