நடிகை ராதிகா மகள் ரேயன். இவர் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரேயன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர், அதில் அடிக்கடி தன்னுடைய குழந்தை பருவ போட்டோஸ், குடும்பத்தினருடன் இருக்கும் நிறைய படங்களை பகிர்ந்து கொள்வார்.
இவரது கணவர் அபினவ் ஒரு கிரிக்கெட் வீரர். இந்த தம்பதிக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்ற மகளும் உள்ளனர். ராதிகா அடிக்கடி தன் பேரக்குழந்தைகளை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ராதிகா தன் மகன் ராகுல், மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் பாரிஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு ஈஃபிள் டவர், டிஸ்னிலேண்ட் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்த பிறகு, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் பேலஸ் சென்றனர்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸை ரேயன் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“