/indian-express-tamil/media/media_files/2025/08/13/wmremove-transformed-1-2025-08-13-17-44-45.jpeg)
Actress Rambha
நடிகை ரம்பா பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தொண்ணூறுகளில் இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். சமீபத்தில் கலா மாஸ்டர், ரம்பாவைச் சந்திப்பதற்காக சென்னையில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றார். அப்பொழுது ரம்பா பயன்படுத்தும் படுக்கையைப் பார்த்து ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்றார் கலா மாஸ்டர்.
அப்படி அந்த படுக்கையில் என்னதான் இருந்தது என்று நீங்கள் யோசிப்பது எங்களுக்குப் புரிகிறது. வாருங்கள், அந்த படுக்கையின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இது வெறும் படுக்கை இல்லை!
வழக்கமான படுக்கை போல இது இல்லை. இது ஒரு ஸ்மார்ட் படுக்கை! இந்த படுக்கையில் பலவிதமான வசதிகள் இருக்கின்றன. நாம் படுத்துக்கொண்டே படுக்கையின் தலையணையை உயர்த்துவதும் தாழ்த்துவதும் சாத்தியம். படுத்தபடியே புத்தகங்கள் படிக்கவோ அல்லது தொலைக்காட்சிகள் பார்க்கவோ இது மிகவும் உதவியாக இருக்கும்.
படுக்கையின் கீழே பலவிதமான வண்ணங்களில் மின்விளக்குகள் எரிகின்றன. நாம் விரும்பிய வண்ணத்தைத் தேர்வுசெய்யும் வசதி இருப்பதால், படுக்கையறையின் தோற்றத்தையே மாற்றியமைத்து, நமக்கேற்ற மனநிலையையும் உருவாக்கிக்கொள்ளலாம்.
படுக்கையிலேயே மசாஜ் செய்யும் வசதியும் உள்ளது. வேலை முடிந்து களைப்பாக வரும்போது, சில நிமிடங்களுக்கு இந்த மசாஜ் வசதியை பயன்படுத்தினால், நம் உடல் வலி குறைந்து, புத்துணர்ச்சி கிடைப்பதைப் போல உணர்வுகளை இது கொடுக்கும்.
அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறது. குளிர்ந்த இடங்களில் இருப்பவர்களுக்கு, உடலைச் சூடாக வைத்துக்கொள்ள இந்த படுக்கையில் ஒரு வசதி இருக்கிறது. கலா மாஸ்டரை இந்த படுக்கை வியப்படைய வைத்ததில் ஆச்சரியம் இல்லை. இவ்வளவு வசதிகள் ஒரு சாதாரண படுக்கையில் இருந்தால் யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?
உங்கள் வீட்டிலும் நீங்கள் மெத்தை வாங்குவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால், இதை பரீசிலியுங்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.